மசாலா ஐஸ்கிரீம்?.. காரசாரமான ஐஸ்கிரீமை உருவாக்கி சாதனை!

சென்னை: கார சாரமான, உப்பு மிளகுடன் கூடிய ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது. சாக்லெட், ஸ்ட்ராபெர்ரி என எந்த வகை ஐஸ்கிரீமை சுவைத்தாலும் வண்ணமும், வாசனையும் வேறுபடுமே தவிர, சுவை என்னவோ இனிப்பாக மட்டுமே இருக்கும். ஆனால், சென்னை எழும்பூரில் உள்ள ஷமோசீஸ் என்ற இந்த ஐஸ்கிரீம் கடையில் அறுசுவைகளிலும் ஐஸ்கிரீம் கிடைக்கிறது. கொய்யா, அன்னாசி உள்ளிட்ட பழங்களில் உப்பும் காரமும் சேர்த்து ஜில்லென்ற கிரீமாக சுவைத்தால் எப்படி இருக்கும்!! அதனை நாம் கற்பனை செய்யும்போதே கப்பில் ஸ்கூப்பாக கொடுக்கிறது
 

மசாலா ஐஸ்கிரீம்?.. காரசாரமான ஐஸ்கிரீமை உருவாக்கி சாதனை!

சென்னை: கார சாரமான, உப்பு மிளகுடன் கூடிய ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது. சாக்லெட், ஸ்ட்ராபெர்ரி என எந்த வகை ஐஸ்கிரீமை சுவைத்தாலும் வண்ணமும், வாசனையும் வேறுபடுமே தவிர, சுவை என்னவோ இனிப்பாக மட்டுமே இருக்கும்.

ஆனால், சென்னை எழும்பூரில் உள்ள ஷமோசீஸ் என்ற இந்த ஐஸ்கிரீம் கடையில் அறுசுவைகளிலும் ஐஸ்கிரீம் கிடைக்கிறது. கொய்யா, அன்னாசி உள்ளிட்ட பழங்களில் உப்பும் காரமும் சேர்த்து ஜில்லென்ற கிரீமாக சுவைத்தால் எப்படி இருக்கும்!! அதனை நாம் கற்பனை செய்யும்போதே கப்பில் ஸ்கூப்பாக கொடுக்கிறது ஷமோசீஸ்.

கொய்யாவுடன் உப்பு மிளகாய், அன்னாசியுடன் இஞ்சி‌, உப்பு என அறுசுவைகளை கொண்டு 35 வகையான ஐஸ்கிரீம்கள் இயற்கை முறையிலேயே தயாரிக்கப்படுவதாக இவர் கூறுகிறார். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை மட்டுமின்றி பெங்களூரு, ஜெய்ப்பூர்‌ உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஷமோசீஸிலிருந்து ட்ரை ஐஸ்கிரீம் பேக்கிங் செய்து டெலிவரி செய்யப்படுகிறது.

– வணக்கம் இந்தியா

From around the web