அச்சமும் வேண்டாம், அலட்சியமும் வேண்டாம்! சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கோரிக்கை!!

சென்னையில் மளமளவென்று கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்ததும், கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து தொற்று பரவுவது தெரியவந்ததும் சென்னை வாழ் மக்களிடம் அச்சமும் பரப்பரப்பும் ஏற்பட்டுள்ளது. தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கார்கள், டூவீலர்கள் என கிடைத்த வாகனத்தில் ஏறிச் சென்ற வண்ணம் இருக்கிறார்கள். சுங்கச்சாவடியில் போலீசாரால் தடுத்து நிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கிராமங்கள் வழியாகச் சென்று சுங்கச்சாவடியை தவிர்த்து, கிட்டத்தட்ட சென்னையிலிருந்து தப்பி ஓடுபவர்கள் போலச் செல்கிறார்கள். சென்னையில் கொரோனா தொற்று அதிகம் பரவுவதாக தெரியவந்ததும் கடந்த வெள்ளிக்கிழமை மூத்த ஐ.ஏ.எஸ்
 

அச்சமும் வேண்டாம், அலட்சியமும் வேண்டாம்! சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கோரிக்கை!!சென்னையில் மளமளவென்று கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்ததும், கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து தொற்று பரவுவது தெரியவந்ததும் சென்னை வாழ் மக்களிடம் அச்சமும் பரப்பரப்பும் ஏற்பட்டுள்ளது. 

தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கார்கள், டூவீலர்கள் என கிடைத்த வாகனத்தில் ஏறிச் சென்ற வண்ணம் இருக்கிறார்கள். சுங்கச்சாவடியில் போலீசாரால் தடுத்து நிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கிராமங்கள் வழியாகச் சென்று சுங்கச்சாவடியை தவிர்த்து, கிட்டத்தட்ட சென்னையிலிருந்து தப்பி ஓடுபவர்கள் போலச் செல்கிறார்கள்.

சென்னையில் கொரோனா தொற்று அதிகம் பரவுவதாக தெரியவந்ததும் கடந்த வெள்ளிக்கிழமை மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜே. ராமகிருஷ்ணனை, சென்னை மாநகராட்சி கொரோனா கட்டுப்பாடு சிறப்பு அதிகாரியாக கடந்த வெள்ளிக்கிழமை தமிழக அரசு நியமித்தது. சுனாமி பேரிடர் காலத்தில் நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் சிறப்பு அதிகாரியாக திறம்பட செயல்பட்டவர். பேரிடர்களை கையாளுவதில் திறமை வாய்ந்தவரும் ஆவார்.

சென்னை கொரோனா தொற்று குறித்து ராமகிருஷ்ணன் கூறும் போது,  “அச்சப்படவும் வேண்டாம், அலட்சியமாகவும் இருக்க வேண்டாம். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இந்தியாவிலேயே கொரோனாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகம். அறிகுறி இல்லாதவர்களுக்கும் பரிசோதனை மூலம் தான் தொற்று இருப்பது தெரியவருகிறது. பரிசோதனைகள் அதிகரித்துள்ளதால் தான் தொற்று எண்ணிக்கையும் அதிகம் தெரிகிறது.

கோயம்பேடு தொடர்புடையவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவு. எனவே பயப்படத் தேவையில்லை,” என்று கூறியுள்ளார்.

பேரிடர் ஸ்பெஷல் அதிகாரி ராமகிருஷ்ணன் கட்டுப்பாட்டில் சென்னை கொரோனா தொற்று விவகாரம் வந்துள்ளதால், விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

A1TamilNews.com

 

From around the web