இதயத்தை பலப்படுத்தும் சூப்…!

இன்றைய வாழ்க்கை முறையில் முறையற்ற உணவுப் பழக்க வழக்கமே அனைத்து நோய்களுக்கும் அடிப்படைக் காரணியாக விளங்குகிறது. அதிலும் மன அழுத்தத்துடன் பார்க்கும் வேலைகளே அதிகம். மனதை ரிலாக்ஸ் செய்யவும்,இதயத்தை சீராக இயங்கச் செய்யவும் காய்கறி சூப் செய்து சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினசரியே இந்த சூப்பை எடுத்துக் கொள்ளலாம். குறைந்தது வாரம் இரு முறையாவது பீன்ஸ் சூப் செய்து சாப்பிட்டு வர இதயத்தை சீராகவும், சுறுசுறுப்பாகவும் இயங்க வைக்கிறது. தேவையான பொருட்கள் பீன்ஸ்-1கப் துவரம்
 

இதயத்தை பலப்படுத்தும் சூப்…!ன்றைய வாழ்க்கை முறையில் முறையற்ற உணவுப் பழக்க வழக்கமே அனைத்து நோய்களுக்கும் அடிப்படைக் காரணியாக விளங்குகிறது. அதிலும் மன அழுத்தத்துடன் பார்க்கும் வேலைகளே அதிகம். மனதை ரிலாக்ஸ் செய்யவும்,இதயத்தை சீராக இயங்கச் செய்யவும் காய்கறி சூப் செய்து சாப்பிடலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினசரியே இந்த சூப்பை எடுத்துக் கொள்ளலாம். குறைந்தது வாரம் இரு முறையாவது பீன்ஸ் சூப் செய்து சாப்பிட்டு வர இதயத்தை சீராகவும், சுறுசுறுப்பாகவும் இயங்க வைக்கிறது.

தேவையான பொருட்கள்
பீன்ஸ்-1கப்
துவரம் பருப்பு-1/4கப்
சின்ன வெங்காயம்-5
தக்காளி-1(சிறியது)
மஞ்சள் தூள்-1சிட்டிகை
உப்பு -தேவையான அளவு

செய்முறை
துவரம் பருப்பை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பீன்ஸை கழுவி , தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேக விட வேண்டும்.

பாதி வெந்தவுடன் வேக வைத்த துவரம் பருப்பு, சின்ன வெங்காயம், பொடியாக அரிந்த தக்காளி , உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பீன்ஸ் மற்றும் பருப்பு கலந்து செய்யப்படும் இந்த சூப் மிகவும் ஆரோக்கியமானது. இந்த சூப்பில் அதிகப்படியான நார்ச்சத்து, பொட்டாசியம் இருக்கிறது. நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் எதுவும் இல்லை.தேவையான அளவு பொட்டாசியம் உடலின் இயக்கங்களை சமநிலைப்படுத்தி ரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது.

http://www.A1TamilNews.com

From around the web