காணாமல் போன மகன் அமெரிக்காவில்… 20 ஆண்டுகள் தேடிய பெற்றோர்!

சென்னை: இருபது ஆண்டுகளுக்கு முன்னால் காணாமல் போன மகன் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்து பெற்றோரை சந்தித்துள்ளார். . சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் நாகேஸ்வர ராவ் – சிவகாமி தம்பதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு. இரண்டு வயதாக இருந்த மகன் சுபாஷ், 1999ம் ஆண்டு கடத்தப்பட்டு மலேசியா சோசியல் சர்வீஸ் அமைப்பிடம் விற்கப்பட்டுள்ளார். மலேசியா சோசியல் சர்வீஸ் அமைப்பு சுபாஷை அமெரிக்காவில் உள்ள பெற்றோருக்கு தத்து கொடுத்துள்ளார்கள். சட்டத்திற்கு விரோதமாக குழந்தைகளைக் கடத்தி
 

காணாமல் போன மகன் அமெரிக்காவில்… 20 ஆண்டுகள் தேடிய பெற்றோர்!

சென்னை:  இருபது ஆண்டுகளுக்கு முன்னால் காணாமல் போன மகன் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்து பெற்றோரை சந்தித்துள்ளார். .

சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் நாகேஸ்வர ராவ் – சிவகாமி தம்பதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு. இரண்டு வயதாக இருந்த மகன் சுபாஷ், 1999ம் ஆண்டு கடத்தப்பட்டு மலேசியா சோசியல் சர்வீஸ் அமைப்பிடம் விற்கப்பட்டுள்ளார். மலேசியா சோசியல் சர்வீஸ் அமைப்பு சுபாஷை அமெரிக்காவில் உள்ள பெற்றோருக்கு தத்து கொடுத்துள்ளார்கள். சட்டத்திற்கு விரோதமாக குழந்தைகளைக் கடத்தி வெளிநாட்டு தம்பதிகளுக்கு தத்து கொடுக்கும் இந்த அமைப்பு மீது வழக்குகள் தொடரப்பட்டது.

சுபாஷ் காணாமல் போன பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யதனர் பெற்றோர். சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்ட பிறகு வழக்கு சூடு பிடித்து மலேசிய சோசியல் சர்வீஸ் அமைப்பு மூலம் சுபாஷ் அமெரிக்காவில் தத்து கொடுக்கப்பட்டது தெரிய வந்தது. 

பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு நாகேஸ்வரராவின் வழக்கறிஞர் சுந்தரவடிவேலன் மூலம் சுபாஷை தொடர்பு கொண்டு, பெற்றோர் பற்றியும், சுபாஷ் காணாமல் போனது பற்றியும் தெரிவித்துள்ளனர். தன்னுடைய உண்மையான பெற்றோர்களை காண சுபாஷ் சென்னை வந்து குடும்பத்தினரை சந்தித்து மகிழ்ந்துள்ளார். இந்த அனுபவம் பற்றி சுபாஷ் கூறியதாவது,

“அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியில் வளர்ந்து வந்தேன். அங்கே வெள்ளைக்காரர்களே அதிகம். அவர்களுக்கு மத்தியிலேயே வளர்ந்தேன். நான் ஏன் வேறு விதமாக இருக்கிறேன் என்று அடிக்கடி எனக்கு கேள்வி எழும். நான் தத்தெடுக்கப்பட்டேன் என்று தெரியும். ஆனால் என்னுடைய உண்மையான பூர்விகம் எது என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது.

வழக்கறிஞர் சுந்தரவடிவேலன் மூலம் அனைத்தையும் தெரிந்து கொண்டேன். என் பெற்றோரையும் சகோதரர், சகோதரியையும் பார்த்துப் பேசியது மிகவும் நெகிழ்ச்சியானது. எனக்கு தமிழில் பேசத் தெரியவில்லை என்பதால் வழக்கறிஞரின் மொழிபெயர்ப்புடன் தான் பேசினேன். ஆனால், பெற்றோரின் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

தற்போது அமெரிக்கா செல்கிறேன். இனி அடிக்கடி வருவேன். தமிழ் கற்றுக்கொண்டு வந்து என் பெற்றோரிடம் நேரடியாகப் பேசுவேன்,” என்று தழுதழுக்கக் கூறினார் சுபாஷ்.

அமெரிக்காவில் தத்தெடுக்கப்பட்டு வளர்ந்துள்ள சுபாஷ் அங்கே அவினாஷ் என்ற பெயரில் உள்ளார்.மகனை இழந்து 20 வருடங்களாக வாடிய பெற்றோர்கள் மீண்டும் மகனை சந்தித்த மகிழ்ச்சியில் பூரிப்படைந்துள்ளனர். 

– வணக்கம் இந்தியா 

From around the web