நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சோளம், தினை போண்டா!

தேவையான பொருட்கள்: சோள மாவு – 3/4 கப் தினை மாவு – 1/2கப் உருளைக்கிழங்கு – 2 வெங்காயம் – 2 இஞ்சி – 1/2டீஸ்பூன் கொத்தமல்லி – தேவையான அளவு பச்சை மிளகாய் – 2 மிளகாய்த்தூள் – 1/2டீஸ்பூன் கறிவேப்பிலை – ஒரு கொத்து கடுகு – 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு -1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி – 1/4 டீஸ்பூன் உப்பு-தேவையான அளவு. எண்ணெய் -தேவையான அளவு. செய்முறை உருளைக்கிழங்கை
 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சோளம், தினை போண்டா!தேவையான பொருட்கள்:
சோள மாவு – 3/4 கப்
தினை மாவு – 1/2கப்
உருளைக்கிழங்கு – 2
வெங்காயம்  – 2
இஞ்சி – 1/2டீஸ்பூன்
கொத்தமல்லி – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த்தூள் – 1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு -1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – 1/4 டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு.
எண்ணெய் -தேவையான அளவு.

செய்முறை
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.  இத்துடன் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள்தூள், கொத்தமல்லி போட்டு நன்றாகக் கலந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.  

சோள மாவு ,தினை மாவு இரண்டையும் சிறிது உப்பு, மிளகாய்த்தூள், ஆப்பசோடா கலந்து தண்ணீர் சேர்த்து  பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைத்து கொள்ளவும். அடுப்பில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் உருளைக்கிழங்கு மசாலா உருண்டைகளை, தயாராக உள்ள  சோள ,தினை மாவு கலவையில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சூப்பரான சுவையில் சோள, தினை போண்டா தயார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் போண்டா இது. 

From around the web