கடற்கரையில் இடம் கேட்பதற்கு முன்னால் இதை யோசிச்சாரா ஸ்டாலின்?

சென்னை: கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரடியாக கோரிக்கை விடுத்ததும், அரசு சார்பில் தலைமைச் செயலாளர் கிரிஜா கிண்டியில் இடம் ஒதுக்கியதும் நடந்தது. அதையடுத்து உயர்நீதி மன்றம் சென்று போராடி அண்ணா சதுக்கத்தில் இடத்தைப் பெற்றார் ஸ்டாலின். இதற்கிடையே கருணாநிதிக்கு கடறகரையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று முதல் குரலாக ரஜினிகாந்த் ட்வீட் செய்தார். பிற தலைவர்களும் அதை வலியுறுத்தினார்கள்.
 

சென்னை: கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரடியாக கோரிக்கை விடுத்ததும், அரசு சார்பில் தலைமைச் செயலாளர் கிரிஜா கிண்டியில் இடம் ஒதுக்கியதும் நடந்தது. அதையடுத்து உயர்நீதி மன்றம் சென்று போராடி அண்ணா சதுக்கத்தில் இடத்தைப் பெற்றார் ஸ்டாலின்.

இதற்கிடையே கருணாநிதிக்கு கடறகரையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று முதல் குரலாக ரஜினிகாந்த் ட்வீட் செய்தார். பிற தலைவர்களும் அதை வலியுறுத்தினார்கள். உலகம் முழுவதும் சோசியல் மீடியா விலும் ’MARINA FOR MK’ என்ற கோரிக்கைகள் எழுந்தது. உயர்நீதிமன்ற ஆணைப்படி கலைஞர் கருணாநிதிக்கு அண்ணாவுக்கு அருகில் இடமும் கொடுத்தாகி விட்டது. அவரும் அங்கு மீளாத்துயிலில் இருக்கிறார்.

இந்நிலையில் வாட்ஸ் அப், முகநூலில் ஒரு அதிர்ச்சி தகவலை பரப்பி வருகிறார்கள். அதில் குறிப்பிட்டுள்ளதாவது,

“அண்ணாவின் சமாதி மெரினாவில் அமைந்தவுடன் திமுக இரண்டாக உடைந்தது. எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார்.

எம்ஜிஆரின் சமாதி மெரினாவில் அமைந்தவுடன் அதிமுக ஜா,ஜெ என உடைந்தது.

அம்மாவின் சமாதி மெரினாவில் அமைந்தவுடன் சசிகலா, இபிஎஸ்&ஓபிஎஸ் என்று உடைந்தது.

இப்பொழுது கருணாநிதியின் சமாதி மெரினாவில்.அடுத்து என்ன ?”.

இப்படிப் போகிறது அந்த வாட்ஸ் அப் வம்பு.

மூத்த தலைவர் திமுக செயலாளார் க அன்பழகன் இன்னும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார். ஆனாலும் அழகிரியுடன் சமாதானக் கொடி பறக்காமல், ஒன்றுபட்ட திமுகவாக தொடருமா? என்ற கேள்வி இயல்பாக எழுந்து விட்டது என்பதை மறுப்பதற்கில்லை.

– வணக்கம் இந்தியா

From around the web