உஷார்!! உங்களது வங்கிக் கணக்கை திருடும் ஸ்மார்ட் போன் வைரஸ்!

தொடர் ஊரடங்கு காலத்தில் பொது மக்களிடையே சமூக வலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரம் இணைய தளம் வாயிலாக நடைபெறும் சைபர் குற்றங்களின் அளவும் அதிகரித்து வருகிறது என சிபிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையதளம் வாயிலாக வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து பணம் மோசடி செய்வது அதிகரித்து இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் ஸ்மார்ட் போன் வைரஸ்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த அனைத்து மாநில காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா விழிப்புணர்வுத் தகவல்கள்
 

உஷார்!!  உங்களது வங்கிக் கணக்கை திருடும் ஸ்மார்ட் போன் வைரஸ்!தொடர் ஊரடங்கு காலத்தில் பொது மக்களிடையே சமூக வலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரம் இணைய தளம் வாயிலாக நடைபெறும் சைபர் குற்றங்களின் அளவும் அதிகரித்து வருகிறது என சிபிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

இணையதளம் வாயிலாக வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து பணம் மோசடி செய்வது அதிகரித்து இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனால் ஸ்மார்ட் போன் வைரஸ்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த அனைத்து மாநில காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா விழிப்புணர்வுத் தகவல்கள் ஸ்மார்ட் போனுக்கு முதலில் அனுப்பி வைக்கப்படுகிறது. அதில் உள்ள இணைப்பை ‘கிளிக்’ செய்த உடன் ‘செர்பெரஸ்’ வைரஸ் தானே ஸ்மார்ட்போன் சாப்ட்வேர் வழியாகச் சென்று வங்கி கணக்கு தகவல்களை திருடி விடும் தன்மை வாய்ந்தது.

வங்கிகளின் தகவல்கள் போன்று இரு முறை அங்கீகாரமும் வாடிக்கையாளர்களிடம் கேட்கப்படும். வாட்ஸ் அப் மட்டுமல்ல எந்த சமூக வலைதளங்கள் மூலமாகவும் வரும் குறுந்தகவல்களில் இருக்கும் எந்த இணைப்பையும் ‘கிளிக்’ செய்ய வேண்டாம் என சி.பி.ஐ. அறிவுறுத்தியுள்ளது.

A1TamilNews.com

From around the web