சிவலிங்கா விமர்சனம்

லாரன்ஸ் ஒரு போலீஸ் ஆபிசர். ஒரு கொலை கேசைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு அவருக்கு தரப்படுகிறது. கொலையான ஆள் தான் பேய். தன் கேசை லாரன்ஸ் விசாரிச்சுக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற கண்டிஷனுடன் லாரன்ஸின் இளம் மனைவி ரித்திகா சிங் உடலில் புகுந்துகொள்கிறது அந்த ஆவி(வித்தியாசம் பாஸு!)… அப்புறம் என்ன? வழக்கம்போல் பழி வாங்கலும் அது தொடர்பான விசாரணையும் தான். நமக்கு இதுதான் செட் ஆகும் என்று மீண்டும் பேயையே கையில் எடுத்து விட்டார் லாரன்ஸ். இந்த முறை
 

சிவலிங்கா விமர்சனம்

லாரன்ஸ் ஒரு போலீஸ் ஆபிசர். ஒரு கொலை கேசைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு அவருக்கு தரப்படுகிறது. கொலையான ஆள் தான் பேய். தன் கேசை லாரன்ஸ் விசாரிச்சுக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற கண்டிஷனுடன் லாரன்ஸின் இளம் மனைவி ரித்திகா சிங் உடலில் புகுந்துகொள்கிறது அந்த ஆவி(வித்தியாசம் பாஸு!)… அப்புறம் என்ன? வழக்கம்போல் பழி வாங்கலும் அது தொடர்பான விசாரணையும் தான்.

நமக்கு இதுதான் செட் ஆகும் என்று மீண்டும் பேயையே கையில் எடுத்து விட்டார் லாரன்ஸ். இந்த முறை பி.வாசு இயக்கம், கதையும் அவரது ஹிட் படத்தின் ரீமேக் என்பதால் அதிகம் வேலை இல்லை யாருக்குமே… நமக்கும் அதிகம் வேலை வைக்காமல் யூகித்தக் காட்சிகளையே படம் முழுக்க வைத்து ஃபில் பண்ணியிருக்கிறார்கள்.

லாரன்ஸ் முந்தைய படத்தில் மக்கள் சூப்பர் ஸ்டார் இதில் சின்ன கபாலி(ரைட்டு… இவர் வாங்காம போக மாட்டார் போல!). இன்னும் எத்தனை படத்துல தான் மாற்றுத்திறனாளிகளை ஆட வெச்சு அதை பயன்படுத்திக்குவீங்க பாஸ்?

ரித்திகா சிங்குக்கு பேய் புகுந்துகொள்ளும் கேரக்டர். பெர்ஃபார்மென்ஸில் பின்னி எடுக்கிறார். பாடல் காட்சிகளில் கவர்ச்சி காட்டி பரவசமூட்டுகிறார்.

வடிவேலுவும் ஊர்வசியும் சேர்ந்து கலகலப்பாக படத்தை கொண்டு செல்கிறார்கள். அவர்களை விட நான் சிபிஐனு யார்கிட்டயும் சொல்லாதீங்க என்று படத்தில் வரும் எல்லா கேரக்டர்களிடமும் லாரன்ஸ் சொல்வது பெரிய காமெடி. சக்தி வாசு முதன்முறையா நடிக்க முயற்சி பண்ணியிருக்கிறார்.

ப்ளஸ்

வடிவேலு – ஊர்வசி கூட்டணி காமெடி.
பக்கா கமர்ஷியல் திரைக்கதை.
எடிட்டிங்.

மைனஸ்

அதே பார்த்து சலித்த லாரன்ஸ் கேரக்டரைசேஷன்.
யூகிக்க முடிந்த காட்சிகள்
இசை.

சந்திரமுகியையும் காஞ்சனாவையும் இணைத்தால் சிவலிங்கா ரெடி. ஆனால் வடிவேலு காமெடி முதல் க்ளைமாக்ஸ் வரை எங்குமே வித்தியாசம் இல்லாமல் ஒரே மாதிரி போகிறது.

வழக்கமான லாரன்ஸ் படம். பி, சி செண்டர்களைக் கவரும்.

– ராஜீவ்

From around the web