இன்னுமொரு கீழடி? தூத்துக்குடி அருகே சிவகளையில் அகழ்வாராய்ச்சி!!

தமிழர்களின் நாகரீகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு சங்க இலக்கியங்களும், திருக்குறளும் சான்றாக விளங்குகிறது. அதற்கும் முற்பட்ட, சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று தொல்காப்பியம் பறை சாற்றுகிறது. இந்த இலக்கியங்களில் கூறப்பட்டவைகளுக்கு வரலாற்று ஆவணங்களாக சிவகங்கை மாவட்டம் கீழடியில் எண்ணற்றப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, ஆய்வுக்குட்படுத்தப் பட்டுள்ளது. கீழடிக்கும் முன்னதாகவே தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டத்திற்கு தெற்கே தாமிரபரணி ஆற்றங்கரையோரம் ஆதிச்சநல்லூர் அகழ்வாரய்ச்சி நடத்தப்பட்டு ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டது. ஆனால், அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக
 

இன்னுமொரு கீழடி? தூத்துக்குடி அருகே சிவகளையில் அகழ்வாராய்ச்சி!!மிழர்களின் நாகரீகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு சங்க இலக்கியங்களும், திருக்குறளும் சான்றாக விளங்குகிறது. அதற்கும் முற்பட்ட, சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று தொல்காப்பியம் பறை சாற்றுகிறது.

இந்த இலக்கியங்களில் கூறப்பட்டவைகளுக்கு வரலாற்று ஆவணங்களாக சிவகங்கை மாவட்டம் கீழடியில் எண்ணற்றப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, ஆய்வுக்குட்படுத்தப் பட்டுள்ளது.

கீழடிக்கும் முன்னதாகவே தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டத்திற்கு தெற்கே தாமிரபரணி ஆற்றங்கரையோரம் ஆதிச்சநல்லூர் அகழ்வாரய்ச்சி நடத்தப்பட்டு ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டது. ஆனால், அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமலே உள்ளது.

பல்வேறு கோரிக்கைகள், நீதிமன்ற வழக்குகளுக்குப் பிறகு ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி தொடரப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலின் போது ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியை தொடரச்செய்வேன் என்று கனிமொழி வாக்குறுதி அளித்து இருந்தார். இந்நிலையில் ஏரல் அருகே சிவகளையிலும் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கியுள்ளன. சிவகளையில் கீழடிக்கு நிகரான நாகரீக அடையாளங்கள் கிடைக்கப் பெறும் என்று நம்பப்படுகிறது.

ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளில் இரும்பிலான பொருட்கள், சுத்தியல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுவதுண்டு. இறந்து போனவர்களுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் வைத்து அடக்கம் செய்யும் பழக்கம் இன்றளவிலும் தமிழர்களிடம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏரல் அருகே கொற்கையிலும் தொல்லியல் துறை ஆய்வுகள் முன்பு நடந்துள்ளது, அங்கு கிடைக்கப்பெற்ற பொருட்கள் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் வைத்து பூட்டப்பட்டு கேட்பாரற்று கிடப்பாதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். ஒரு காலத்தில் கடல் கொற்கை வரையிலும் இருந்ததால், அங்கே பாண்டிய மன்னர்களின் துறைமுகம் இருந்ததாகவும் பெரும் வணிகம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
 

ஆதிச்சநல்லூர், சிவகளையைத் தொடர்ந்து கொற்கையிலும் மீண்டும் தொல்லியல் துறை ஆய்வுகள் நடத்தப்பட வேண்டுமென்று தூத்துக்குடி மாவட்ட மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

From around the web