சிங்கப்பூரில் ஆளும் கட்சியே தேர்தலில் மீண்டும் வெற்றி!

உலகம் முழுவதும் கொரோனா அச்சத்தால் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நேரத்தில் தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. தற்போது சிங்கப்பூரின் பிரதமராக இருக்கும் லீ செய்ன் லூங் தலைமையிலான பீப்பிள் ஆக் ஷன் கட்சியின் ஆட்சி முடிய 10மாதம் கால அவகாசம் உள்ள நிலையில் முன்னதாகவே தேர்தலை அறிவித்தார் பிரதமர். கொரோனா அச்சம் காரணமாக முககவசம், கையுறைகள் அணிந்தபடி மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு இரவு
 

சிங்கப்பூரில் ஆளும் கட்சியே தேர்தலில் மீண்டும் வெற்றி!லகம் முழுவதும் கொரோனா அச்சத்தால் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நேரத்தில் தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது.

தற்போது சிங்கப்பூரின் பிரதமராக இருக்கும் லீ செய்ன் லூங் தலைமையிலான பீப்பிள் ஆக் ஷன் கட்சியின் ஆட்சி முடிய 10மாதம் கால அவகாசம் உள்ள நிலையில் முன்னதாகவே தேர்தலை அறிவித்தார் பிரதமர்.

கொரோனா அச்சம் காரணமாக முககவசம், கையுறைகள் அணிந்தபடி மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டிருந்தது.

வாக்குப்பதிவு இரவு 8 மணி வரை நீடித்தது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பாதுகாப்புடன் வாக்களித்தனர். தேர்தல் நடத்தப்பட்ட 93 இடங்களில் பெரும்பான்மையாக 83 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதனால் ஆளும் கட்சியே மறுபடியும் ஆட்சியை அமைக்கவுள்ளது.

A1TamilNews.com

From around the web