சிங்கப்பட்டி ஜமீன் ராஜா முருகதாஸ் தீர்த்தபதியின் சக்தி என்ன தெரியுமா? சீமராஜா படப்பிடிப்பில் நடந்த உண்மைச் சம்பவம்!!

ஞாயிற்றுக்கிழமை முதுமை காரணமாக உயிரிழந்த சிங்கம்பட்டி ஜமீன், இந்தியாவின் கடைசி ராஜா முருகதாஸ் தீர்த்தபதி குறித்த புதிய பல தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளது. சிவகார்த்திகேயேன் நடித்த சீமராஜா படத்தில் சிங்கம்பட்டி ஜமீனாக நடித்த முன்னால் அமைச்சரும் நடிகருமான நெப்போலியன் படப்படிப்பு நடைபெற்ற சம்பவம் ஒன்றை மிகவும் உருக்கமாக கூறியுள்ளார். அதன் விவரம் வருமாறு; “அன்புச் சகோதரர் சிவகார்த்திகேயனோடு சீமராஜா என்ற திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீனாக மறைந்த மன்னரைப்போன்று வேடமேற்று நடித்த பெருமை எனக்கு கிடைத்தது.
 

சிங்கப்பட்டி ஜமீன் ராஜா முருகதாஸ் தீர்த்தபதியின் சக்தி என்ன தெரியுமா? சீமராஜா படப்பிடிப்பில் நடந்த உண்மைச் சம்பவம்!!ஞாயிற்றுக்கிழமை முதுமை காரணமாக உயிரிழந்த சிங்கம்பட்டி ஜமீன், இந்தியாவின் கடைசி ராஜா முருகதாஸ் தீர்த்தபதி குறித்த புதிய பல தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளது.

சிவகார்த்திகேயேன் நடித்த சீமராஜா படத்தில் சிங்கம்பட்டி ஜமீனாக நடித்த முன்னால் அமைச்சரும் நடிகருமான நெப்போலியன் படப்படிப்பு நடைபெற்ற சம்பவம் ஒன்றை மிகவும் உருக்கமாக கூறியுள்ளார். அதன் விவரம் வருமாறு;

“அன்புச் சகோதரர் சிவகார்த்திகேயனோடு சீமராஜா என்ற திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீனாக மறைந்த மன்னரைப்போன்று வேடமேற்று நடித்த பெருமை எனக்கு கிடைத்தது. அந்த திரைப்படத்தை அவரின் அரண்மனையிலேயே படம் பிடித்தோம். 

படப்பிடிப்பு முதல் நாள் அன்று காலையிலேயே அவரைச் சந்தித்து முதலில் ஆசீர்வாதம் வாங்கினேன். அப்பொழுது அவரிடம் இந்தப் படத்தில் உங்களைப் போன்று ராஜா வேடமிட்டு நடிக்கிறேன் என்ன கூறினேன். நீ ராஜா மாதிரிதான் இருக்கிறாய் நல்ல பொருத்தமாக இருக்கிறது , நீ நன்றாக நடிப்பாய் என்று மனதார வாழ்த்தினார்.

உடனே அருகில் இருந்த அவரது உதவியாளர் ஒருவர் உங்களுக்கு ராஜ திருஷ்டி கிடைத்துவிட்டது ராஜாவே சொன்னதால் என்று கூறினார். உடனே, ராஜா ஆமாம் ஆமாம்,
என் கண்ணு படக்கூடாது,  பட்டுவிட்டது. அதனால் உனக்கு இன்று இரவு உடல் நிலை சற்று பாதிப்பு ஏற்படும், ஆனால் பயப்பட வேண்டாம், நாளை ஒருநாளில் எல்லாம் சரியாகிவிடும் என்று ஒரு மந்திரம் சொல்லி என்னை ஆசீர்வாதம் செய்தார். 

நானும் சும்மா விளையாட்டுக்கு கூறுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு நடிக்கச்
சென்றுவிட்டேன். மாலையில் படப்பிடிப்பு குழுவினர் நாங்கள் அனைவரும் தங்கியிருந்த திருநெல்வேலி விடுதிக்கும் வேலை முடிந்தவுடன் சென்றுவிட்டோம். ஆனால், அவர் கூறியதுபோல அன்று இரவு எனக்கு 103டிகிரி காய்ச்சல் வந்துவிட்டது. அவர் சொன்னது போலவே அடுத்த நாள் காலையில் சரியாகியும் விட்டது. என்ன ஆச்சரியம் என்று அதைக் கண்டு வியந்தேன்.

ராஜாவுக்குள் உண்மையில் ஏதோ ஒரு தெய்வசக்தி உள்ளது என்று மட்டும் புரிந்து கொண்டேன். 3 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்த சம்பவம் என் மனதில் இப்பொழுதும் வந்து நிழலாடியது. எப்பொழுதும் என்னால் மறக்க முடியாதது. இவ்வுலகில் நீங்காபுகழைப் பெற்ற அந்த அற்புத மனிதர் சிங்கம்பட்டி ஜமீன் வாழ்க. மாமனிதர் மன்னர் வாழ்க.

திரைப்படத்தில் ஒரு மாதம் ராஜா வேடமிட்டு நடித்ததற்கே எனக்கு பேரும் புகழும் கிடைத்தது என்றால், நிஜமான அந்த ராஜாவுக்கு கிடைக்கின்ற புகழ் காலத்தால் அழிக்க முடியாதது…!
ஐயாவின் புகழ் வாழ்க! மன்னரின் புகழ் வளர்க! அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்,” என்று உருக்கமாகக் கூறியுள்ளார் நெப்போலியன்.

A1TamilNews.com

From around the web