கோடை வெயிலால் உடலில் ஏற்படும் கருமையைப் போக்க எளிய வழிகள்!

கொரோனாவும், கோடை வெயிலும் சேர்ந்து மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதிகப்படியான வெயிலின் தாக்கத்தால் முகம், கழுத்துப் பகுதிகளில் கருமை படிந்து விடும். அழகு நிலையங்கள் இன்னமும் திறக்கப்படாத நிலையில் முக அழகை கண்ணாடியில் பார்த்து தாழ்வு மனப்பான்மையில் மனம் குன்றிப் போகும். இதோ வீட்டிலிருந்தே எளிய முறையில் தீர்வு காணலாம். எலுமிச்சை சாறு மற்றும் தேன் சம அளவு சேர்த்து கலக்கி விட்டு முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்த பின்
 

கோடை வெயிலால் உடலில் ஏற்படும் கருமையைப் போக்க எளிய வழிகள்!கொரோனாவும், கோடை வெயிலும் சேர்ந்து மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதிகப்படியான வெயிலின் தாக்கத்தால் முகம், கழுத்துப் பகுதிகளில் கருமை படிந்து விடும்.
அழகு நிலையங்கள் இன்னமும் திறக்கப்படாத நிலையில் முக அழகை கண்ணாடியில் பார்த்து தாழ்வு மனப்பான்மையில் மனம் குன்றிப் போகும். இதோ வீட்டிலிருந்தே எளிய முறையில் தீர்வு காணலாம்.

எலுமிச்சை சாறு மற்றும் தேன் சம அளவு சேர்த்து கலக்கி விட்டு முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்த பின் முகத்தைக் கழுவினால் முகம் பளிச், பளிச் என மின்னலடிக்கும்.

குளிக்கும் நீரில் எலுமிச்சை சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து, குளிக்கும் போது உடலில் படர்ந்திருக்கும் கருமைகள் அகலும்.கடலை மாவு, மஞ்சள் தூள் இவற்றுடன் சிறிது பசும்பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து வெயிலால் கருமை படர்ந்திருக்கும் இடங்களில் தேய்த்து அரைமணி ஊறி வெதுவெதுப்பான நீரில் குளித்திட தோல் பளபளக்கும்.

சோடா உப்பை ரோஸ் வாட்டருடன் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறிய பின் குளிக்க கருமை மறைந்து விடும்.ஓட்ஸை பாலில் சேர்த்து கலக்கி முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து முகம் கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரிக்காயை தோல் நீக்கி அரைத்து முகத்தில் தடவி அரைமணி ஊறி அலச உடலில் தென்படும் கருமை மட்டுமின்றி, கரும்புள்ளிகள், பருக்கள் இவற்றையும் போக்கும்.

A1TamilNews.com

From around the web