எடியூரப்பா அரசு இன்னும் 3 மாதம் தான்- சித்தராமைய்யா!

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் -மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்த்து ஆட்சியைப் பிடித்த, எடியூரப்பா அரசு இன்னும் 3 மாதத்தில் கவிழும் என்று முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யா கூறியுள்ளார். மைசூருவில் பேட்டி அளித்த சித்தராமைய்யா கூறியதாவது, “மோடி, அமித்ஷா என்றால் எடியூரப்பா உள்ளிட்ட பாஜகவினருக்கு பயம் வந்து விடுகிறது. மழை வெள்ளம் காரணமாக கர்நாடகா முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டது. அதற்கான நிவாரண நிதியை மத்திய அரசிடம் கேட்பதற்கு கூட மாநில அரசுக்கு துணிச்சல் இல்லை. முதல்வர் எடியூரப்பா
 

எடியூரப்பா அரசு இன்னும் 3 மாதம் தான்- சித்தராமைய்யா!

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் -மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்த்து ஆட்சியைப் பிடித்த, எடியூரப்பா அரசு இன்னும் 3 மாதத்தில் கவிழும் என்று முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யா கூறியுள்ளார்.

மைசூருவில் பேட்டி அளித்த சித்தராமைய்யா கூறியதாவது,

“மோடி, அமித்ஷா என்றால் எடியூரப்பா உள்ளிட்ட பாஜகவினருக்கு பயம் வந்து விடுகிறது.  மழை வெள்ளம் காரணமாக கர்நாடகா முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டது. அதற்கான நிவாரண நிதியை மத்திய அரசிடம் கேட்பதற்கு கூட மாநில அரசுக்கு துணிச்சல் இல்லை. 

முதல்வர் எடியூரப்பா 25 நாட்கள் தனியாக அதிகாரம் செலுத்தினார். மாநில அரசு இன்னும் செயல்படவில்லை. இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் தயாராக உள்ளார்கள். இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் சட்டமன்றத் தேர்தல் கூட வரக்கூடும். காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும்,”  என்று சித்தராமைய்யா கூறியுள்ளார்.

வெள்ள நிவாரண நடவடிக்கை எடுக்காத  பாஜக மாநில அரசு மீது மக்கள் அதிருப்தியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆட்சி கவிழும் பட்சத்தில் அதை சாதகமாக்கிக் கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராகி வருவதாகத் தெரிகிறது

– வணக்கம் இந்தியா

From around the web