அதிர்ச்சி!! டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படும் பணியிடங்கள் குறைக்கப்பட வாய்ப்பு!

கொரோனாவைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருக்கும் தொடர் ஊரடங்கால் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வருகிறது. சரிந்து வரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அரசின் செலவினங்களை குறைக்க திட்டமிட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் புதிய பணியிடங்கள் நிரப்பப்பட மாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் திடீர் அறிவிப்பால் அரசுத் தேர்வாணையர்கள் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் குறிப்பிட்டுள்ள படி நடத்தப்படுமா என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். காலி பணியிடங்களுக்காக மட்டுமே TNPSC குரூப் 2 மற்றும் குரூப்4 தேர்வுகள்
 

அதிர்ச்சி!! டிஎன்பிஎஸ்சி  மூலமாக நிரப்பப்படும்  பணியிடங்கள் குறைக்கப்பட வாய்ப்பு!கொரோனாவைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருக்கும் தொடர் ஊரடங்கால் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வருகிறது.

சரிந்து வரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அரசின் செலவினங்களை குறைக்க திட்டமிட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் புதிய பணியிடங்கள் நிரப்பப்பட மாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் திடீர் அறிவிப்பால் அரசுத் தேர்வாணையர்கள் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் குறிப்பிட்டுள்ள படி நடத்தப்படுமா என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

காலி பணியிடங்களுக்காக மட்டுமே TNPSC குரூப் 2 மற்றும் குரூப்4 தேர்வுகள் நடத்தப்படுவதாகவும் புதிய பணியிடங்களுக்காக அல்ல என்று தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் குரூப் 4 மூலமாக தேர்வு செய்ய இருக்கும் பணியிடங்களில் 2000 பேரும், குரூப் 2ல் 1000 பணியிடங்கள் வரையில் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

A1TamilNews.com

From around the web