அதிர்ச்சி! வங்கியில் ரூ 10 லட்சத்தை அலேக்காக தூக்கிச் சென்ற 10 வயது சிறுவன் !

நாடு முழுவதும் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் நீமுஜ் என்ற மாவட்டத்திலுள்ள ஜாவத் பகுதியில், கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி நேற்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில் வங்கி காசாளர் அறைக்குள் இருந்த 10 லட்சம் ரூபாய் காணாமல் போய்விட்டது. அதிர்ச்சியைடைந்த வங்கி நிர்வாகிகள் உடனடியாக சிசிடிவி கேமராவை ஆராய்ந்து பார்த்தனர். இதில் சிறுவன் ஒருவன் பணத்தை அலேக்காக தூக்கிச்சென்றது தெரியவந்தது. காசாளர் தன்னுடைய கேபின்
 

அதிர்ச்சி! வங்கியில் ரூ 10 லட்சத்தை  அலேக்காக தூக்கிச் சென்ற 10 வயது சிறுவன் !நாடு முழுவதும் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் நீமுஜ் என்ற மாவட்டத்திலுள்ள ஜாவத் பகுதியில், கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.

இந்த வங்கி நேற்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில் வங்கி காசாளர் அறைக்குள் இருந்த 10 லட்சம் ரூபாய் காணாமல் போய்விட்டது. அதிர்ச்சியைடைந்த வங்கி நிர்வாகிகள் உடனடியாக சிசிடிவி கேமராவை ஆராய்ந்து பார்த்தனர்.

இதில் சிறுவன் ஒருவன் பணத்தை அலேக்காக தூக்கிச்சென்றது தெரியவந்தது.
காசாளர் தன்னுடைய கேபின் அறையை பூட்டாமல் பக்கத்து அறைக்கு சென்ற நேரத்தில் 10 வயது சிறுவன் ஒருவன் நைசாக கேஷியர் கேபின் அறைக்குள் சென்று, 500 ரூபாய் நோட்டு கட்டுகள் இரண்டை எடுத்து, தான் வைத்திருந்த பைக்குள் போட்டுக்கொண்டு, மின்னல் வேகத்தில் திடீரென மறைந்தது தெரிய வந்தது.

இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பாக கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு முன்பாக 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன், வங்கிக்குள் நுழைந்து ஓரமாக காத்திருந்து, சுற்றும் முற்றும் யாரும் பார்க்கிறார்களா என நோட்டம் விட்டுக் கொண்டிருந்ததும், அவன் வெளியே நின்ற அந்த சிறுவனுக்கு சிக்னல் கொடுத்ததும் சிசிடிவி காட்சியில் தெளிவாக பதிவாகியிருந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

A1TamilNews.com

From around the web