டெல்லி வன்முறையின் போது எங்கே போனார் அமித் ஷா? – முன்னாள் பங்காளி சிவசேனா கேள்வி!

டெல்லி பற்றி எரிந்து கொண்டிருந்த போது உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்கே போயிருந்தார் என்று சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னா கேள்வி எழுப்பியுள்ளது. “38 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. இதுவே காங்கிரஸ் கூட்டணி ஆட்சி என்றால் உள்துறை அமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்லி கோரிக்கை எழுந்திருக்கும். ஆனால் எதிர்கட்சிகள் பலவீனமாக உள்ளதால் அமித்ஷாவை ராஜினாமா செய்யச் சொல்லி பெரிய அளவில் கோரிக்கைகள் வரவில்லை. ஆனாலும் சோனியாகாந்தி அமித் ஷாவை பதவி விலகச் சொல்லியிருக்கிறார். டெல்லியில்
 

டெல்லி வன்முறையின் போது எங்கே போனார் அமித் ஷா? – முன்னாள் பங்காளி சிவசேனா கேள்வி!டெல்லி பற்றி எரிந்து கொண்டிருந்த போது உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்கே போயிருந்தார் என்று சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னா கேள்வி எழுப்பியுள்ளது.

“38 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளன.  இதுவே காங்கிரஸ் கூட்டணி ஆட்சி என்றால் உள்துறை அமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்லி கோரிக்கை எழுந்திருக்கும். ஆனால் எதிர்கட்சிகள் பலவீனமாக உள்ளதால் அமித்ஷாவை ராஜினாமா செய்யச் சொல்லி பெரிய அளவில் கோரிக்கைகள் வரவில்லை.

ஆனாலும் சோனியாகாந்தி அமித் ஷாவை பதவி விலகச் சொல்லியிருக்கிறார். டெல்லியில் 38 பேர் கொல்லப்பட்ட நேரத்தில் அமைச்சரவையின் பாதிப்பேர் அகமதாபாத்தில் ட்ரம்பை சந்திக்கச் சென்றுவிட்டனர். அமித் ஷா எங்கிருந்தார்?”

இவ்வாறு சிவசேனாவின் பத்திரிக்கையில் கேள்வி எழுப்பப் பட்டுள்ளது. பாஜகவின் முதல் கூட்டணி கட்சி சிவசேனா ஆகும்.  கட்சி நிறுவனர் பால் தாக்கரே இருக்கும் வரையில் மஹாராஷ்ட்ராவில் இரண்டாம் நிலையில் இருந்த பாஜக. சிவசேனாவை சிறிய கட்சியாக்கும் அளவுக்கு முன்னேற்றம் கண்டது. கூட்டாளி பாஜக வை உதறித் தள்ளிவிட்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது சிவசேனா. 

அப்போது தொடர்ந்தே பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் சிவசேனா கட்சித் தலைவர்கள்.

http://www.A1TamilNews.com

From around the web