ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு அழைப்பு… மஹாராஷ்ட்ராவில் பரபரக்கும் அரசியல்!

ஆட்சி அமைக்க விருப்பமா, முடியுமா என்று தெரிவிக்குமாறு சிவசேனா கட்சிக்கு மஹாராஷ்ட்ரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷாரி அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக பாஜக தரப்பில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்கள். அதையடுத்து சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. 288 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட மஹாராஷ்ட்ராவில் 105 எம்.எல்.ஏ.க்களுடன் தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு 56 இடங்கள் கிடைத்தன. தேசியவாத
 

ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு அழைப்பு… மஹாராஷ்ட்ராவில் பரபரக்கும் அரசியல்!ட்சி அமைக்க விருப்பமா, முடியுமா என்று தெரிவிக்குமாறு சிவசேனா கட்சிக்கு மஹாராஷ்ட்ரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷாரி அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக பாஜக தரப்பில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்கள்.  அதையடுத்து சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

288 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட மஹாராஷ்ட்ராவில் 105 எம்.எல்.ஏ.க்களுடன் தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு 56 இடங்கள் கிடைத்தன. தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றன.

முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் இரு கட்சிகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை முன்னதாக ஏற்றுக் கொண்ட பாஜக தற்போது மறுக்கிறது. தவறானவர்களுடன் கூட்டணி வைத்ததற்காக வருந்துகிறோம் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார்.

இந்நிலையில் சிவசேனாவின் முக்கிய தலைவர் சஞ்சய் ராவத் ,சிவசேனா கட்சியைச் சார்ந்தவர் தான் அடுத்த முதலமைச்சர் என்று கூறியுள்ளார். சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து நாளை (நவம்பர் 12) நடைபெறும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தேசியவாத கட்சியின் மூத்த தலைவர் நவாஸ் மாலிக் கூறியிருக்கிறார்.  பாஜக உறவை முற்றிலும் முறித்து விட்டு மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறி சிவசேனா முறையான அழைப்பு விடுத்தால், ஆட்சியில் பங்கேற்பது குறித்து பரிசீலிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் சவான், சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சி அமைப்பது பற்றி இன்னும் முடிவெடுக்க வில்லை என்று கூறியுள்ளார். மஹாராஷ்ட்ராவில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புவதாகவும் அசோக் சவான் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸும், காங்கிரஸ் கட்சியும் சிவசேனாவுக்கு ஆதரவு தருவதற்கு தயாராகி விட்டதாகத் தெரிகிறது. ஆட்சி அமைப்பது தொடர்பான பதிலளிப்பதற்கு சிவசேனாவுக்கு 24 மணி நேர கெடு விடுத்துள்ளார் ஆளுநர்.

இன்று மாலைக்குள் மஹாராஷ்ட்ராவில் அடுத்த ஆட்சி அமைவது தொடர்பான முடிவு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவசேனாவை தொடங்கிய பால் தாக்கரேவின் பேரன் ஆதித்யா தாக்கரே முதலமைச்சர் ஆவார் என்றும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web