மகிழ்ச்சி! விரைவில் கொரோனா தடுப்பூசி! விலை ஆயிரம் ரூபாய்!!

இந்தியாவில் உள்ள முன்னணி தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமான செரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, அக்டோபர் மாதம் கொரோனா தடுப்பூசியை சந்தைப் படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. செரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்திய குழுமத்தின் ஏற்றுமதி – இறக்குமதி பிரிவு இயக்குனர் புருஷோத்தமன் நம்பியார் கொச்சிபோஸ்ட் செய்தித்தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இது குறித்த் தகவல்களை பகிர்ந்துள்ளார். கேள்விகளுக்கு பதிலளித்துள்ள புருஷோத்தமன் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் மக்களோடு நீண்ட நாட்கள் இருக்கப் போகிறது. கொரோனா நோயிலிருந்து மக்களை காப்பதற்கு தடுப்பு
 

மகிழ்ச்சி! விரைவில் கொரோனா தடுப்பூசி! விலை ஆயிரம் ரூபாய்!!ந்தியாவில் உள்ள முன்னணி தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமான செரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, அக்டோபர் மாதம் கொரோனா தடுப்பூசியை சந்தைப் படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

செரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்திய குழுமத்தின் ஏற்றுமதி – இறக்குமதி பிரிவு இயக்குனர் புருஷோத்தமன் நம்பியார் கொச்சிபோஸ்ட் செய்தித்தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இது குறித்த் தகவல்களை பகிர்ந்துள்ளார்.

கேள்விகளுக்கு பதிலளித்துள்ள புருஷோத்தமன் கூறியுள்ளதாவது,

“கொரோனா வைரஸ் மக்களோடு நீண்ட நாட்கள் இருக்கப் போகிறது. கொரோனா நோயிலிருந்து மக்களை காப்பதற்கு தடுப்பு மருந்து மிகவும் அவசியமாகும். 

தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்து உலகம் முழுவதும் வினியோகிக்கும் முன்னணி நிறுவனங்களில் எங்கள் நிறுவனம் ஒன்றாகும். எங்களிடம் மிகப்பெரிய உற்பத்திக் கூடம் உள்ளது. 

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் ஆய்வின் படி கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து, சோதனைகளை முடித்து உற்பத்தி செய்யும் நிலைக்கு வந்துள்ளது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து இந்த தடுப்பு மருந்தை எங்கள் நிறுவனம் உற்பத்தி செய்ய  உள்ளது. அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. அக்டோபர் மாதம் சந்தைக்கு வந்து விடும். உலகின் பல நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளார்கள். எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு தான் முதலில் சந்தைக்கு வர உள்ளது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்திலிருந்து வரும் செல் பேங்கிலிருந்து, தடுப்பு மருந்துக்கான மொத்த உற்பத்தியை புனேவில் உள்ள எங்கள் தொழிற்சாலையில் தொடங்க உள்ளோம்.  உலகம் முழுவதும் தடுப்பு மருந்தை குறைந்த விலைக்கு விற்பதற்கு பெயர் போனது எங்கள் நிறுவனம். இந்தியாவில் 1,000 ரூபாய் விலை நிர்ணயித்துள்ளோம். இதில் வரும் இழப்பை வெளிநாடுகளுக்கு செய்யும் ஏற்றுமதி மூலம் ஈடுகட்டிக் கொள்வோம்.

எங்களின் முயற்சி முழு வெற்றியடைய இந்திய அரசுத் தரப்பில் ஊக்கமளித்துள்ளார்கள். அனைத்து விதமான ஒத்துழைப்பை  அரசு வழங்கி வருகிறது,” என்று கூறியுள்ளார் புருஷோத்தமன் நம்பியார்.

செரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் 170 நாடுகளுக்கு பல்வேறு தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்து வருகிறார்கள். உலகத்தின் 3 குழந்தைகளில் 2 பேருக்கு இந்த நிறுவனம் தயாரிக்கும் ஒரு தடுப்பு மருந்தாவது கொடுக்கப்படுகிறது. 

A1TamilNews.com

நன்றி:கொச்சி போஸ்ட்

From around the web