5ம் வகுப்பு 8ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைப்பு – செங்கோட்டையன்!

சென்னை: 5ம் வகுப்பு 8ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மத்திய அரசினுடையது. தமிழகத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற பள்ளிக்கல்வித் துறையின் சுற்றறிக்கைக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில்கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டம் தெரிவித்தனர். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்தத் தேர்வுகள் ஏற்கனவே அமலில் இருந்தது என்று கூறினார். இந்நிலையில் பள்ளிக்
 

5ம் வகுப்பு 8ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைப்பு – செங்கோட்டையன்!சென்னை: 5ம் வகுப்பு 8ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மத்திய அரசினுடையது. தமிழகத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற பள்ளிக்கல்வித் துறையின் சுற்றறிக்கைக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில்கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டம் தெரிவித்தனர்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்தத் தேர்வுகள் ஏற்கனவே அமலில் இருந்தது என்று கூறினார். இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“5ம் வகுப்பு, 8ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மத்திய அரசின் திட்டம். மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்காக மூன்றாண்டுகள் விலக்கு பெற்றுள்ளோம். அடுத்த மூன்றாண்டுகள் தற்போதைய முறையே தொடரும். 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பெயில் செய்யப்பட மாட்டார்கள்,” என்று கூறினார்.

மேலும் 11வது, 12வது வகுப்புப் பாடத்திட்டத்தில் 6 பாடங்கள் உள்ளதை 5 ஆகக் குறைக்கக் கோரி விண்ணப்பங்கள் முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

அமைச்சரின் அறிவிப்பால் தமிழக மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தற்காலிக நிவாரணம் கிடைத்துள்ளது.

– வணக்கம் இந்தியா

From around the web