செம விமர்சனம்

Rating: 2.5/5.0 நடிகர்கள்: ஜிவி பிரகாஷ், அர்த்தனா பினு, யோகி பாபு, மன்சூர் அலிகான், கோவை சரளா இசை: ஜிவி பிரகாஷ் தயாரிப்பு: பாண்டிராஜ், ரவிச்சந்திரன் இயக்கம்: வள்ளிகாந்த் ஜிவி பிரகாஷைப் பொருத்தவரை ஒரே பாலிசிதான்… கதை நல்லாருக்கோ இல்லையோ… தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடினாலே திருப்தி ஆகிவிடுவார் போலிருக்கிறது. செம படத்தின் கதையைச் சொன்னால், இதே டைப்ல இன்னும் எத்தனை படம்யா பண்ணுவீங்க, என்று சண்டைக்கு வந்தாலும் வருவீங்க. விமர்சனம்னா நாலுவரியில் கதையைப்
 

Rating: 2.5/5.0

செம விமர்சனம்

நடிகர்கள்: ஜிவி பிரகாஷ், அர்த்தனா பினு, யோகி பாபு, மன்சூர் அலிகான், கோவை சரளா

இசை: ஜிவி பிரகாஷ்

தயாரிப்பு: பாண்டிராஜ், ரவிச்சந்திரன்

இயக்கம்: வள்ளிகாந்த்

ஜிவி பிரகாஷைப் பொருத்தவரை ஒரே பாலிசிதான்… கதை நல்லாருக்கோ இல்லையோ… தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடினாலே திருப்தி ஆகிவிடுவார் போலிருக்கிறது.

செம படத்தின் கதையைச் சொன்னால், இதே டைப்ல இன்னும் எத்தனை படம்யா பண்ணுவீங்க, என்று சண்டைக்கு வந்தாலும் வருவீங்க.

விமர்சனம்னா நாலுவரியில் கதையைப் பத்தி சொல்லியாகணுமே… அதனால் சம்பிரதாயத்துக்காக..

நண்பன் யோகி பாபுவுடன் சின்னச்சின்ன வேலைகள், சில்லறை வியாபாரம் செய்து வருபவர் ஜிவி பிரகாஷ். அடுத்த 3 மாதத்துக்குள் ஜிவிக்கு திருமணம் ஆகாவிட்டால், அடுத்த 6 ஆண்டுகளுக்கு திருமணம் தடைபடும் என ஜோசியர் ஒருவர் சொல்ல, பெண் தேடுகிறார்கள். யாரும் கிடைத்தபாடில்லை. கடைசியில் மன்சூர் அலிகான் – கோவை சரளா தம்பதிகளின் மகள் அர்த்தனா பிந்துவுடன் திருமணம் நிச்சயமாகிறது. ஆனால் அந்தத் திருமணமும் கடைசி நேரத்தில் நிற்கிறது. நின்ற திருமணம் 3 மாதங்களுக்குள் நடந்ததா? ஜோசியர் வாக்கு பலித்ததா? என்பதுதான் மீதி.

படத்தை காமெடியுடன் கலகலப்பாக நகர்த்திவிடலாம் என இயக்குநர் திட்டமிட்டிருக்கிறார். ஆனால் காட்சிகளில்தான் சுவாரஸ்யம் போதவில்லை. நிறைய லாஜிக் மிஸ்டேக்குகள் வேறு.

செம விமர்சனம்

நாயகன் ஜிவி பிரகாஷ் இந்தப் படத்தில் அவ்வளவாக எரிச்சலூட்டவில்லை. காரணம் அடக்கி வாசித்திருப்பது. இந்த மாதிரி பாத்திரங்களில் அவரால் இன்னும் கூட ஜொலிக்க முடியும். தொடரட்டும்.

மன்சூர் அலிகான், கோவை சரளா, யோகிபாபு மூவரும்தான் படத்தை கலகலப்பாக நகர்த்த உதவுகின்றனர். ஆனால் ஆங்காங்கேதான் சிரிப்பு வருகிறது. மொத்தப்படத்தையும் தாங்க இது போனமானதல்ல.

யோகி பாபு வழக்கத்துக்கு மாறாக, கண்டபடி ஒருமையில் அழைத்து முகம் சுளிக்க வைக்கிறார். சினிமா உலகில் ஒரே ஒரு கவுண்டமணிதான் என்பதை யோகி பாபுகள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒளிப்பதிவு இசை இரண்டுமே படத்தில் பாஸ் மார்க் பெறுகின்றன. ஜிவி இசையில் அந்த சண்டாளி பாடல் கேட்க வைக்கிறது.

நல்ல முயற்சிதான். ஆனால் வெறும் முயற்சி மட்டும் போதாதே… நல்ல காட்சியமைப்பும், சுவாரஸ்யமான திருப்பங்கள் இருந்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.

இந்த செம, ரசிகர்களுக்கு ஒரு சுமார்தான்!

– வணக்கம் இந்தியா

From around the web