செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும்! ஐ.ஐ.டி. அதிரடி அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாதிப்பு குறைந்திருக்கும் இடங்களில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முதலிடம் அளிக்கும் வகையில் கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து இன்னும் சாதகமான முடிவுகள் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சென்னை ஐஐடி ஆன்லைன் வழியாக தேர்வு நடத்த முடிவு செய்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐஐடியில் படிக்கும் இறுதியாண்டு
 

செமஸ்டர் தேர்வுகள்  ஆன்லைனில் நடத்தப்படும்! ஐ.ஐ.டி. அதிரடி அறிவிப்பு!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பாதிப்பு குறைந்திருக்கும் இடங்களில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முதலிடம் அளிக்கும் வகையில் கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து இன்னும் சாதகமான முடிவுகள் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் சென்னை ஐஐடி ஆன்லைன் வழியாக தேர்வு நடத்த முடிவு செய்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐஐடியில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வாய்மொழித் தேர்வுகளை நடத்தி மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

சென்னை தவிர இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இயங்கி வரும் ஐஐடிக்கள் இறுதியாண்டு மாணவர்களுக்கு கடைசி செமஸ்டர் தேர்வை நடத்தப் போவதில்லை எனவும், இதற்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web