குண்டும் குழியுமான சாலைகளுடன் செல்ஃபி

கர்நாடகாவில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தும் விதமாக குண்டும் குழியுமான சாலைகளுடன் செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள் மங்களூர் வாசிகள். மங்களூருவைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் இருவர் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி விண்வெளி வீரர்கள் போல் வேடம் புனைந்து, சாலையை மேடு பள்ளங்கள் நிறைந்த சாலையை நிலவாகச் சித்தரித்து அவர்கள் காணொலியைப் பதிவிட்டனர். இதைதொடர்ந்து பெங்களூருவிலுள்ள சாலையின் நிலை குறித்து சமூக ஆர்வலர் நஞ்சுண்ட சாமி விண்வெளி வீரர் போல வேடமிட்டு
 

கர்நாடகாவில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தும் விதமாக குண்டும் குழியுமான சாலைகளுடன் செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள் மங்களூர் வாசிகள்.

மங்களூருவைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் இருவர் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி விண்வெளி வீரர்கள் போல் வேடம் புனைந்து, சாலையை மேடு பள்ளங்கள் நிறைந்த சாலையை நிலவாகச் சித்தரித்து அவர்கள் காணொலியைப் பதிவிட்டனர். இதைதொடர்ந்து பெங்களூருவிலுள்ள சாலையின் நிலை குறித்து சமூக ஆர்வலர் நஞ்சுண்ட சாமி விண்வெளி வீரர் போல வேடமிட்டு காணொலியை பதிவிட்டார்.

இதையடுத்து, அந்த சாலைகள் சீரமைக்கப்பட்டன. இந்நிலையில், குண்டும் குழியுமான சாலைகளில் செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடும், பிசாரத்தை மங்களூர் ‌மக்கள் குழுவினர் தொடங்கியுள்ளனர். மோசமான சாலை அமைந்துள்ள இடத்தின் பெயரை குறிப்பிட்டு “SELFIE WITH POTHOLES” என்ற பெயரில் மங்களூரு மக்கள் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

-வணக்கம் இந்தியா

From around the web