சீமராஜா விமர்சனம்

நடிகர்கள்: சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன், லால் ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியன் இசை: டி இமான் தயாரிப்பு: ஆர்டி ராஜா இயக்கம்: பொன்ராம் கிட்டத்தட்ட ரஜினி பட ரேஞ்சுக்கு ஓபனிங் காட்சிகள், பஞ்ச் வசனங்கள், மன்னர் கால ப்ளாஷ்பேக் என சிவகார்த்திகேயனுக்கு பக்கா மாஸ் காட்ட எடுக்கப்பட்டிருக்கும் படம் சீமராஜா. ஆனால் அவர்களே ஒப்புக் கொள்வதுபோல, அரைச்ச மாவைத்தான் அரைத்திருக்கிறார்கள். அது எந்த அளவுக்கு ருசிக்கிறது என்பதைப் பார்ப்போம். சிங்கம்பட்டி ஜமீன் நெப்போலியனின் ஒரே மகன் சீமராஜா.
 

சீமராஜா விமர்சனம்

டிகர்கள்: சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன், லால்

ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியன்

இசை: டி இமான்

தயாரிப்பு: ஆர்டி ராஜா

இயக்கம்: பொன்ராம்

கிட்டத்தட்ட ரஜினி பட ரேஞ்சுக்கு ஓபனிங் காட்சிகள், பஞ்ச் வசனங்கள், மன்னர் கால ப்ளாஷ்பேக் என சிவகார்த்திகேயனுக்கு பக்கா மாஸ் காட்ட எடுக்கப்பட்டிருக்கும் படம் சீமராஜா.

ஆனால் அவர்களே ஒப்புக் கொள்வதுபோல, அரைச்ச மாவைத்தான் அரைத்திருக்கிறார்கள். அது எந்த அளவுக்கு ருசிக்கிறது என்பதைப் பார்ப்போம்.

சிங்கம்பட்டி ஜமீன் நெப்போலியனின் ஒரே மகன் சீமராஜா. இவருக்கு கணக்குப் பிள்ளை, நண்பன், ஐடியா வங்கி எல்லாமே சூரிதான். சிங்கம்பட்டிக்கும் புளியம்பட்டிக்கும் தீராத பகை. காரணம் ஊர் சந்தையை அடாவடியாக இழுத்து மூட வைத்த சிம்ரன் & லால். இந்த விவகாரம் கோர்ட், கேஸ் என இழுத்தடிக்க, பகையும் நீள்கிறது. இந்த சந்தையைத் திறக்க ஒரு டீல் போடுகிறார் சீமராஜா. சிங்கம்பட்டி – புளியம்பட்டியைச் சேர்ந்த தலா பத்து பேர் குஸ்தி போடுவது, அதில் எந்த அணி ஜெயிக்கிறதோ, அவர்களுக்கு சந்தை சொந்தம் என்பது டீல். இதற்கிடையில் சிவகார்த்திகேயன் – சமந்தாவுக்கிடையில் காதல். ஆனால் அந்தக் காதலுக்கும் இந்த சிங்கம்பட்டி – புளியம்பட்டி பகைதான் குறுக்கே நிற்கிறது. இந்த குஸ்திப் போட்டியில் சீமராஜா டீம் ஜெயித்ததா? சிவகார்த்திகேயன் – சமந்தா காதல் என்ன ஆனது? என்பது, ஒரு ஹெவி ப்ளாஷ்பேகுடன் கூடிய மீதிக் கதை.

இயக்குநர் பொன்ராமையும் ஹீரோ சிவகார்த்திகேயனையும் ரஜினியின் முத்து படம் எக்கச்சக்கமாக பாதித்திருக்கிறது. சீமராஜா படம் முழுக்க, சிவகார்த்திகேயனின் உடைகள், பாடி லாங்குவேஜ் என பலவகையிலும் முத்து ரஜினியின் பாதிப்பு. அதற்கேற்ப அந்த கடம்பவேல் ராஜா ப்ளாஷ்பேக்கும். ஏற்கெனவே ரஜினி முருகன் படத்திலேயே முத்து படக் காட்சி ஒன்றை சிவகார்த்திகேயனுக்காக பொன்ராம் வைத்திருந்தது நினைவுக்கு வருகிறது.

சீமராஜா விமர்சனம்

காமெடி, பாடல்கள், அதிரடி சண்டைக் காட்சிகள், நான் சொன்னா மாறமாட்டேன், குடுத்த வாக்கை மீறமாட்டேன் போன்ற பஞ்ச் வசனங்கள் என ஒரு பொழுதுபோக்குப் படத்துக்கான அனைத்து அம்சங்களும் சீமராஜாவில் இருக்கின்றன. ஆனால் அவற்றை
இன்னும் சுவாரஸ்யமாகக் கொடுத்திருக்கலாம் என்பதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. முதல் பாதியில் புறா மூலம் காதல், காதலிக்காக ராமர் வேஷம் போடுதல், பள்ளிக்கு சிறப்பு விருந்தினராகச் செல்லுதல் என கலகலப்புக்கு பஞ்சமில்லை.

சிங்கம்பட்டி கடம்பவேல் ராஜா – மாலிக்காபூர் ப்ளாஷ்பேக்குக்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயனுக்கு ஆக்ஷனும் காமெடியும் பிரமாதமாக வருகிறது. ஆளும் பார்க்க செம மாஸாக இருக்கிறார். கடம்பவேல் ராஜாவாக சீரியஸ் முகமும் காட்டியிருக்கிறார். ஒரு ஹீரோவாக இந்தப் படம் அவருக்கு பெரிய புரமோஷன்.

படம் முழுக்க வருகிறார் சூரி. ஒரு காட்சியில் சிக்ஸ் பேக் வேறு காட்டியிருக்கிறார். அவருக்கும் சிவகார்த்திகேயனுக்குமான காம்பினேஷன் இந்தப் படத்திலும் பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

நாயகி சமந்தா முந்தைய படங்களை விட அழகாகத் தெரிகிறார். இந்த மாதிரி கதையில் தனக்கு என்ன ரோல் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார். சிலம்பு சண்டையில் நிஜமாகவே கலக்குகிறார்.

சீமராஜா விமர்சனம்

சிம்ரன்தான் பிரதான வில்லி. ரொம்ப கொடுமை. அவரது நடிப்பைச் சொல்லவில்லை… தோற்றம் மற்றும் குரலைச் சொல்கிறோம்.

நெப்போலியன் நடிப்பில் நகைச்சுவையும் உண்டு, கம்பீரத்துக்கும் குறைவில்லை. இன்னும் கூட சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம். யோகி பாபுவை ஒரே ஒரு காட்சியில், அதுவும் அனுமாராகக் காட்டி வீணடித்திருக்கிறார்கள்.

சிங்கம்பட்டி அருங்காட்சியகத்தைப் பார்த்துக் கொள்ளும் தாத்தாவாக வருபவர் சிறப்பாகச் செய்திருக்கிறார். சிம்ரன் கணவராக வரும் லால் சும்மா உதார் விட்டுக் கொண்டே நம்மைக் கடந்துவிடுகிறார். அவரை விட அவரது கையாளாக வரும் கலர்ச்சட்டை பார்ட்டி பனானா பவுன்ராஜ் செம!

கவுரவ வேடத்தில் வருகிறார் கீர்த்தி சுரேஷ். அப்படியே சாவித்ரியில் பார்த்த தோற்றம்!

சீமராஜா விமர்சனம்

பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு வண்ணமயம். இமானின் இசையும் ஓகேதான். ஆனால் முணுக்கென்றால் ஒரு பாடல் வருவதுதான் நெளிய வைக்கிறது. மூணு டூயட் பாடல்கள்… தாங்குமா சாமீ?

பொன்ராம் – சிவகார்த்திகேயன் – சூரியின் இந்த மூன்றாவது கூட்டணியும் மோசமில்லை. சீமராஜா… ‘கெத்து’ குறையாத ராஜா!

Rating 3.0/5.0

From around the web