சீனாவிலிருந்து பார்சலில் வந்த விதைகள் ! பயிரிட வேண்டாம் என விவசாயத் துறை எச்சரிக்கை !

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. சீனா தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு சிலருக்கு சீனாவிலிருந்து மர்மமான விதைகள் பார்சலில் வந்துள்ளதாகவும், அந்த விதைகள் குறித்து அமெரிக்க விவசாயத்துறை சந்தேகம் அடைந்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து சீனாவிலிருந்து பார்சலில் மர்மமான விதைகள் வந்தால் அந்த விதைகளை யாரும் பயிரிட வேண்டாம் என பொதுமக்களுக்கு
 

சீனாவிலிருந்து பார்சலில் வந்த விதைகள் ! பயிரிட வேண்டாம் என விவசாயத் துறை எச்சரிக்கை !கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. சீனா தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு சிலருக்கு சீனாவிலிருந்து மர்மமான விதைகள் பார்சலில் வந்துள்ளதாகவும், அந்த விதைகள் குறித்து அமெரிக்க விவசாயத்துறை சந்தேகம் அடைந்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து சீனாவிலிருந்து பார்சலில் மர்மமான விதைகள் வந்தால் அந்த விதைகளை யாரும் பயிரிட வேண்டாம் என பொதுமக்களுக்கு அமெரிக்க விவசாயத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதைப் போன்ற விதைகள் கனடாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதனை சீனா மறுத்துள்ளது. இந்த போலி பார்சலை சீனாவுக்கு திருப்பித் அனுப்புமாறு சீனா, அமெரிக்காவின் அஞ்சல் சேவையை கேட்டுள்ளது, அப்போது தான் அதுகுறித்து சீனா விசாரிக்க முடியும் எனவும், விதைகளை கையாள்வது குறித்த யுனிவர்சல் தபால் ஒன்றியத்தின் விதிகளை சீன தபால் சேவை கண்டிப்பாக கடைபிடித்துள்ளது என்று சீன செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் விளக்கம் அளித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web