அமெரிக்கப் பள்ளிகளில் வீணாகும் உணவு பன்றிகளுக்கு!

போர்ட்லாண்ட்(யுஎஸ்): அமெரிக்காவின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ள மெய்ன் மாநிலத்தில், பள்ளிகளில் வீணாகும் உணவை பன்றிகளுக்கு வழங்கலாம் என சட்டம் இயற்றப் பட்டுள்ளது. அமெரிக்காவின் வட மேற்கே உள்ள பகுதியில் தான் முதன் முதலில் ஐரோப்பியர்களின் குடியேற்றம் அமைந்தது. உணவுக்காக பன்றிகள் வளர்க்கும் பண்ணைகள் அங்கு ஆரம்பகாலம் தொட்டே இருந்து வருகிறது. வீட்டில் வீணாகும் உணவை பன்றிப் பண்ணைக்காரர்களுக்கு கொடுப்பது வழக்கமாக இருந்துள்ளது. பின்னர் சட்டரீதியாக பன்றி வளர்ப்பவர்களுக்கு மட்டும் கொடுக்கலாம் போன்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மீதி
 

அமெரிக்கப் பள்ளிகளில் வீணாகும் உணவு பன்றிகளுக்கு!போர்ட்லாண்ட்(யுஎஸ்): அமெரிக்காவின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ள மெய்ன் மாநிலத்தில், பள்ளிகளில் வீணாகும் உணவை பன்றிகளுக்கு வழங்கலாம் என சட்டம் இயற்றப் பட்டுள்ளது.

அமெரிக்காவின் வட மேற்கே உள்ள பகுதியில் தான் முதன் முதலில் ஐரோப்பியர்களின் குடியேற்றம் அமைந்தது. உணவுக்காக பன்றிகள் வளர்க்கும் பண்ணைகள் அங்கு ஆரம்பகாலம் தொட்டே இருந்து வருகிறது. வீட்டில் வீணாகும் உணவை பன்றிப் பண்ணைக்காரர்களுக்கு கொடுப்பது வழக்கமாக இருந்துள்ளது.

பின்னர்  சட்டரீதியாக பன்றி வளர்ப்பவர்களுக்கு மட்டும் கொடுக்கலாம் போன்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மீதி உணவை கொடுப்பவர்கள், பன்றிப் பண்ணைகளின் சட்டப்பூர்வ நிலை குறித்து அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால் மீதமாகும் உணவை பன்றிப்பண்ணைக்கு கொடுக்க தயக்கம் காட்டினார்கள்.

தற்போது எந்தப் பன்றிப் பண்ணைகளுக்கும் மீதி உணவை வழங்கலாம் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதனால் பன்றிப் பண்ணைகளின் சட்டப்பூர்வ நிலை குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இந்த சட்டதிருத்தத்தின் மூலம் பள்ளிகளில் மீதமாகும் உணவையும் பன்றிப் பண்ணைக்காரர்களுக்கு வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மீதமாகும் உணவை குப்பையில் சேர்ப்பதற்கு ஆகும் செலவு தவிர்க்கப்படுகிறது. பன்றிப் பண்ணை உரிமையாளர்களே வந்து எடுத்துச் சென்று விடுகின்றனர்.

மனித உணவில் மீதமாகும் எதைச் சாப்பிட்டாலும் ஜீரணமாகிவிடும் தன்மை பன்றிகளுக்கு இருப்பதால், இந்த சட்டதிருத்தத்தின் மூலம் பள்ளிகளில் மிச்சமாகும் உணவால் ஏற்படும் துர்நாற்றமும் தவிர்க்கப் படுவதாக பள்ளி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் மிச்சமாகும் உணவை மனிதர்களுக்கோ, மிருகங்களுக்கோ அவ்வளவு சுலபமாக கொடுத்து விட முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும், நகரங்களிலும் வெவ்வேறு நடைமுறைச் சட்டங்கள் உள்ளது.

 

From around the web