சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவை எதிர்த்து திமுக வழக்கு!

சென்னை: சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட ஸ்ரீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தலில் குளறுபடிகள் நடந்ததாகவும் வாக்கு எண்ணிக்கையும் சரிவர நடைபெறவில்லை என்றும் மனுவில் ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் 76 ஆயிரத்து 820 வாக்குகளும், திமுக வேட்பாளர் ஸ்ரீனிவாசன் 75 ஆயிரத்து 719 வாக்குகளும் பெற்றிருந்தனர். ஆயிரத்து 101 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜவர்மன் வெற்றி பெற்றார். மக்கள்
 

சென்னை: சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட ஸ்ரீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தேர்தலில் குளறுபடிகள் நடந்ததாகவும் வாக்கு எண்ணிக்கையும் சரிவர நடைபெறவில்லை என்றும் மனுவில் ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் 76 ஆயிரத்து 820 வாக்குகளும், திமுக வேட்பாளர் ஸ்ரீனிவாசன் 75 ஆயிரத்து 719 வாக்குகளும் பெற்றிருந்தனர்.  ஆயிரத்து 101  வாக்குகள் வித்தியாசத்தில் ராஜவர்மன் வெற்றி பெற்றார். 

மக்கள் நீதி கட்சியின் சார்பில் போட்டியிட்ட சுந்தர்ராஜ்-க்கு 3 ஆயிரத்து 899 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் சுரேஷ்குமாருக்கு 5 ஆயிரத்து 4 வாக்குகளும், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சுப்ரமணியனுக்கு 12 ஆயிரத்து 428 வாக்குகளும் கிடைத்தது இருந்தது.

ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீதான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் வர உள்ள நிலையில், திமுக வேட்பாளர் ஸ்ரீனிவாசனின் மனு மீதான விசாரணை குறித்த எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. 

234 பேர் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதிகள் காலியாக உள்ளன. தற்போதைய நிலவர்ப்படி சட்டமன்றத்தில் அதிமுக 123, திமுக 100, காங்கிரஸ் 7, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்(சுயேட்சை) 1 உறுப்பினர்கள் உள்ளார்கள்.

 

From around the web