ஜெயராஜ்- பென்னிக்ஸ் மீது பொய்வழக்கு ரத்து!! கொலை வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் கைது! 5 போலீசாருக்கு வலை வீச்சு!!

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சாத்தான்குளம் மரணங்கள் குறித்த விசாரணையில், கொலைக் குற்றத்திற்கான முகாந்திரம் உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸ் தீவிர விசாரணையில் இறங்கியது. நெல்லை ல்லை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தலைமையிலான போலீசார் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து ஒரே நேரத்தில் சாத்தான்குளம் காவல்நிலையம், ஜெயராஜ்-பென்னிக்ஸ் கடைப் பகுதி, ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தினர், கோவில்பட்டி கிளைச் சிறை என விசாரணையை மேற்கொண்டார்கள். சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோரும் சென்னையிலிருந்து
 

ஜெயராஜ்- பென்னிக்ஸ் மீது பொய்வழக்கு ரத்து!! கொலை வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் கைது! 5 போலீசாருக்கு வலை வீச்சு!!யர்நீதிமன்ற மதுரை கிளையில் சாத்தான்குளம் மரணங்கள் குறித்த விசாரணையில், கொலைக் குற்றத்திற்கான முகாந்திரம் உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸ் தீவிர விசாரணையில் இறங்கியது.

நெல்லை ல்லை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தலைமையிலான போலீசார் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து ஒரே நேரத்தில் சாத்தான்குளம் காவல்நிலையம், ஜெயராஜ்-பென்னிக்ஸ் கடைப் பகுதி, ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தினர், கோவில்பட்டி கிளைச் சிறை என விசாரணையை மேற்கொண்டார்கள். சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோரும் சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்து சாத்தான்குளத்தில் விசாரணையை மேற்கொண்டனர்.

சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் தீவிர விசாரணையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் ஊரடங்கை மீறியதாகவும், செல்போன் கடையை மூடாமல் தகராறு செய்ததாகவும் சாத்தான்குளம் போலீசார் தவறாக வழக்குப்பதிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த முதல் தகவல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டது.

தொடர்ந்து ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப்பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மற்றும் தந்தை-மகனை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், மகாராஜா உள்ளிட்ட 6 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின்படி கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

 சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷை இரவில் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மற்ற 5 பேரையும் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள், கொலை வழக்குக்கான முகாந்திரம் உள்ளது என்று கூறிய நிலையில் இந்த அதிரடி நடவடிக்கைகள் நடந்துள்ளன. 

போலீசாரே, வியாபாரிகளை கொன்ற கொலை வழக்கில் மற்ற போலீஸ்கார்களுக்கு வலைவீசித் தேடிப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

A1TamilNews.com

From around the web