8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை!

டல்லாஸ் : சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழா நடைபெற்றது. பிரபல நெம்புகோல் கவிஞர். டாக்டர்.கவிதாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகளின் நடனம் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினர் வழங்கிய நடனங்களும் இடம் பெற்றது. இந்த ஆண்டு விழா மூலம் திரட்டப்பட்ட நிதியில், உதவும் கரங்கள் அமைப்பின் நலத்திட்டங்களுக்கு 23 ஆயிரம் டாலர்களும், ஃபீனிக்ஸ் அகடமி மூலம் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சிக்காக 5
 
  8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை!
 
டல்லாஸ் : சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழா நடைபெற்றது. பிரபல நெம்புகோல் கவிஞர். டாக்டர்.கவிதாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகளின் நடனம் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினர் வழங்கிய நடனங்களும் இடம் பெற்றது.
 
இந்த ஆண்டு விழா மூலம் திரட்டப்பட்ட நிதியில்,  உதவும் கரங்கள் அமைப்பின் நலத்திட்டங்களுக்கு 23 ஆயிரம் டாலர்களும், ஃபீனிக்ஸ் அகடமி மூலம் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சிக்காக 5 ஆயிரம் டாலர்கள், திருக்குறள் போட்டிக்காக 5 ஆயிரம் டாலர்கள் வழங்கப்பட்டது.
 
செந்தமிழ் நாடெனும் போதினிலே பாடலுக்கு மேடையில் ஒரு பக்கம்  குழந்தைகள்  நடனமாட, இன்னொரு புறம் மழலைகள் நவீன வடிவத்தில் திரி நடனமும் ஆடினார்கள்.
 
தேஜஸ் நடனப்பள்ளி மாணவர்கள் தமிழிசைப் பாடல்களுக்கு வெவ்வேறு வகையிலான நடனங்கள் ஆட, நடன ஆசிரியர்கள் புவனா, சிந்தன் இருவரின் சிறப்பு நடனமும் இடம் பெற்றது. இறுதியாக  கும்மி நடனத்தில்  பெண்களும் ஆண்களுமாக பார்வையாளர்கள் பங்கேற்றனர். 
 
சிறப்பு விருந்தினர் டாக்டர். கவிதாசன், “எண்ணங்களே ஏணிப்படிகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.  தேவைகள், தூண்டுதல்கள், சுற்றுச்சூழல், பெற்றோரிடமிருந்து மரபணுப் பதிவு  போன்ற காரணங்களினால் “எண்ணங்கள்” தோன்றுகின்றன. அதை நாம் உணர்ந்து கொள்ளும் போது, எண்ணங்களை மாற்றிக் கொள்ளமுடியும். அவைகளை ஏணிப்படிகளாக்கி வாழ்வில் உயரலாம் என்று பல உதாரணங்களை எடுத்துக்காட்டி விவரித்தார்.
8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை!
 
கடந்த எட்டு ஆண்டுகளாக சாஸ்தா தமிழ் அறக்கட்டளை மூலம் திரட்டப்பட்ட நிதியுதவியைக் கொண்டு செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் பற்றி ரம்யா வேலு விவரித்தார்.  2011ம் ஆண்டு முதல் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நலத்திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கினார்கள். முதன் முதலில் உதவும் கரங்கள் அமைப்பில் 30 குழந்தைகளுக்கான பராமரிப்பு செலவுகளை ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து ஆதரவு தருகிறார்கள்.
 
உதவும் கரங்கள், சக்தி கலைக்குழு, காயத்ரி மருத்துவமனை, சென்னை – கடலூர் புயல் நிவாரணம், ஹூஸ்டன் புயல் நிவாரணம், அமெரிக்க தமிழ் கல்விக் கழகம், ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வுப் பயிற்சி, திருக்குறள் போட்டி  என இந்த ஆண்டு வரையிலும் 466 ஆயிரம் டாலர்களுக்கான நலத்திட்டங்களுக்கு உதவி செய்துள்ளார்கள்.  விழா ஏற்பாடுகளுக்கான செலவுகள் தவிர்த்து இந்த தொகை உரிய அமைப்புகளின் நலத்திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை!
 
டல்லாஸில் வசிக்கும் தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள், ஆதரவாளர்கள் பங்களிப்பினால் இது சாத்தியமானது என்று அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள். முத்தையா சுபாஷ் வரவேற்புரை ஆற்றினார்.  விசாலாட்சி வேலு தொகுத்து வழங்கினார். ராதிகா உமா மகேஷ் நன்றியுரை வழங்கினார்.
 
– வணக்கம் இந்தியா
 
 
 

From around the web