அலாஸ்கா முன்னாள் கவர்னர் சாரா பாலின் விவாகரத்து?

அங்கரேஜ்: அமெரிக்காவின் பரப்பளவில் மிகப்பெரிய மாநிலமான அலாஸ்காவின் முன்னாள் கவர்னரும், 2008ம் ஆண்டு துணை அதிபர் வேட்பாளருமான சாரா பாலின் -ஐ அவருடைய கணவர் டாட் பாலின் விவாகரத்து செய்வதாக தகவல்கள் வந்துள்ளது. அங்கரேஜ் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் முழுப்பெயரைக் குறிப்பிடாமல், இனிஷியலை மட்டும் குறிப்பிட்டுள்ளனர். அந்த இனிஷியல் டாட் பாலினுடையது என்று கூறப்படுகிறது. 31 ஆண்டுகாலம் தம்பதிகளாக வசித்தவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். 2008ம் ஆண்டு பிறந்த ட்ரிக் பாக்சன் வான் பாலின் என்ற குழந்தை மைனர்
 

அலாஸ்கா முன்னாள் கவர்னர் சாரா பாலின் விவாகரத்து?

அங்கரேஜ்: அமெரிக்காவின் பரப்பளவில் மிகப்பெரிய மாநிலமான அலாஸ்காவின் முன்னாள் கவர்னரும், 2008ம் ஆண்டு துணை அதிபர் வேட்பாளருமான சாரா பாலின் -ஐ அவருடைய கணவர் டாட் பாலின் விவாகரத்து செய்வதாக தகவல்கள் வந்துள்ளது.

அங்கரேஜ் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் முழுப்பெயரைக் குறிப்பிடாமல், இனிஷியலை மட்டும் குறிப்பிட்டுள்ளனர். அந்த இனிஷியல் டாட் பாலினுடையது என்று கூறப்படுகிறது.

31 ஆண்டுகாலம் தம்பதிகளாக வசித்தவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். 2008ம் ஆண்டு பிறந்த ட்ரிக் பாக்சன் வான் பாலின் என்ற குழந்தை மைனர் என்பதால் விவாகரத்து மனுவில் இனிஷியல் மற்றும் பிறந்த தேதியுடன் குறிப்பிடப் பட்டுள்ளது.

சாரா பாலினின் கடைசி குழந்தைக்கு இனிஷியலும் பிறந்த தேதியும் ஒத்துப் போகிறது என்பதால் இந்த விவாகரத்து மனு சாரா பாலின் – டாட் பாலின் தம்பதியினருடையது தான் என்று செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

ஒத்துப்போக முடியாத மனநிலை இருப்பதால் விவாகரத்து கோருவதாக மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது. அமெரிக்காவின் முக்கியமான அரசியல்வாதியாக விளங்கும் சாரா பாலினுடன் ஒத்துப் போக முடியாமல், அவருடைய 31 ஆண்டு கணவர் விவாகரத்து கோரியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

From around the web