சங்கத் தமிழனுக்கு வந்த சோதனை!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த சங்கத் தமிழன் திரைப்படம் வெளியாகவில்லை. விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, ராசிகண்ணா, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சங்கத் தமிழன்’. இந்தப் படத்தை தயாரித்திருக்கும் விஜயா புரொடக்சன் நிறுவனம் தயாரிப்பில் வெளியான வீரம் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் செங்கல்பட்டு பகுதியில் விநியோகம் செய்தது. அப்போது தர வேண்டிய சுமார் 4 கோடி ரூபாய் தற்போது வரை வழங்கப்படவில்லை
 

சங்கத் தமிழனுக்கு வந்த சோதனை!விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த சங்கத் தமிழன் திரைப்படம் வெளியாகவில்லை.

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, ராசிகண்ணா, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சங்கத் தமிழன்’. இந்தப் படத்தை தயாரித்திருக்கும் விஜயா புரொடக்‌சன் நிறுவனம் தயாரிப்பில் வெளியான வீரம் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் செங்கல்பட்டு பகுதியில் விநியோகம் செய்தது. அப்போது தர வேண்டிய சுமார் 4 கோடி ரூபாய் தற்போது வரை வழங்கப்படவில்லை ‌எனக்கூறி, படத்தை வெளியிட ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, தயாரிப்பு நிறுவனமும், படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் லிப்ரா புரொடக்சன் நிறுவனமும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த படம், திரைக்கு வரவில்லை.

இதேபோல், லிப்ரா புரொடக்சன் ரவீந்திரன் 2013-ம் ஆண்டு பெற்ற 15‌ லட்சம் ரூபாயை திருப்பித் தரவில்லை என்றும் இதனால் ரவீந்திரன் வெளியிடும் சங்கத்தமிழன் படத்தை நெல்லை வினியோக பகுதியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று விக்னேஷ் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் சங்கத்தமிழன் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் வரும் 21-ம் தேதி வரை வெளியிட தடை விதித்திருக்கிறது.

சங்கத் தமிழன் படம் வெளியாகாத நிலையில், கலைமாமணி விருதுபெற தலைமைச் செயலகம் வந்த விஜய் சேதுபதியிடம் செய்தியாளர்கள் அதுகுறித்த கேள்வி எழுப்ப, பதில் கூறாமல் அங்கிருந்து சென்றார். இந்நிலையில், தேனாண்டாள் பிலிம்ஸ் உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தி வருவதாகவும், இன்று மாலைக்குள் சுமூக தீர்வு எட்டப்பட்டு, நாளை படத்தை வெளியிட முயற்சிகள் எடுத்து வருவதாகவும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்‌டுள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web