ஹுஸ்டனில் இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை!

ஹூஸ்டன்: ஹாரிஸ் கவுண்டி போலீஸ் அதிகாரி சந்தீப் தாலிவால் பணியில் இருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியினரான சந்தீப் தாலிவால் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர். சமுதாயப் பணிகளில் முக்கிய பங்காற்றி வருபவர். மிகவும் விருப்பத்துடன் ஹாரிஸ் கவுண்டி ஷெரிஃப் அலுவலகத்தில் போலீஸ் அதிகாரியாகச் சேர்ந்தார். இந்தப் பணியில் சேரும் போது, சீக்கியர்களின் தலைப்பாகை அணிந்து பணி புரிய அனுமதி கோரியிருந்தார். 2015ம் ஆண்டு அவருக்கு அந்த அனுமதி வழங்கப்பட்டது. அப்போது இது அமெரிக்க தேசிய அளவில்
 

ஹுஸ்டனில் இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை!

ஹூஸ்டன்: ஹாரிஸ் கவுண்டி  போலீஸ் அதிகாரி சந்தீப் தாலிவால் பணியில் இருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியினரான சந்தீப் தாலிவால் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர். சமுதாயப் பணிகளில் முக்கிய பங்காற்றி வருபவர். மிகவும் விருப்பத்துடன் ஹாரிஸ் கவுண்டி ஷெரிஃப் அலுவலகத்தில் போலீஸ் அதிகாரியாகச் சேர்ந்தார்.

இந்தப் பணியில் சேரும் போது, சீக்கியர்களின் தலைப்பாகை அணிந்து பணி புரிய அனுமதி கோரியிருந்தார். 2015ம் ஆண்டு அவருக்கு அந்த அனுமதி வழங்கப்பட்டது. அப்போது இது அமெரிக்க தேசிய அளவில் பரபரப்பாகப் பேசப்பட்ட விஷயமாகவும் இருந்தது.

சம்பவம் நடந்த வெள்ளிக்கிழமை அன்று சந்தேகப்பட்ட கார் ஒன்றை நிறுத்தியுள்ளார் சந்தீப். காரில் அமர்ந்திருந்த ட்ரைவரிடம் விவரங்கள் கேட்டுள்ளார். இருவருக்கும் எந்த வாக்குவாதமும் நடக்க வில்லை. சுமூகமான உரையாடலே நடந்துள்ளது. பின்னர் தனது போலீஸ் காருக்கு திரும்பியுள்ளார். ஒரு வேளை டிக்கெட் எதுவும் கொடுக்க இருந்தாரா என்று தெரியவில்லை.

தன்னுடைய காருக்கும் செல்வதற்கு முன்னால், அவரால் நிறுத்தப்பட்ட காரில் இருந்த ராபர்ட் சாலிஸ் என்ற நபர், காரை விட்டு வெளியே இறங்கி வந்து துப்பாக்கியால் சந்தீப்பின் தலையில் சுட்டுள்ளார். அந்த இடத்திற்கு அருகாமையில் வீட்டுக்கு வெளியே புல்தரைகளை சீர்படுத்திக்கொண்டிருந்த பெண் ஒருவர் இதைப் பார்த்துள்ளார். உடனடியாக அவசர உதவி எண் 911 க்கு போன் செய்துள்ளார். 

போலீசார், ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்து சந்தீப்பை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மர்ம நபர் சாலிஸ் அங்கிருந்து தப்பி ஓடி ஒரு கடைக்குள் புகுந்துள்ளார். சந்தீப் தாலிவாலின் காரில் உள்ள காமிராவில் ராபர்ட் சாலிஸின் அடையாளங்கள் தெளிவாக பதிவாகியிருந்ததால், போலீசார் விரைவாக சாலிஸை பிடித்து விட்டனர். கொலைக் குற்றத்திற்காக சாலிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்மணியும் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஆள்கடத்தல், போதையில் கார் ஓட்டுதல், அபாயகரமான ஆயுதங்கள் வைத்திருத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

மரணமடைந்த சந்தீப் தாலிவாலுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளார்கள். சீக்கிய மதத்தைச் சார்ந்தவர்களும் போலீஸ் பணிக்கு வர வேண்டும் என்று முன்னாள் ஹாரிஸ் கவுண்டி ஷெரிஃப் அட்ரியன் கார்சியாவின் வேண்டுகோளை ஏற்று போலீஸ் பணியில் சேர்ந்தவர் சந்தீப். சீக்கிய வழிபாடுகள், சமுதாயப் பணிகளிலும் மிகவும் ஆர்வத்துடன் பணி ஆற்றி வந்துள்ளார்.

ஹுஸ்டனில் இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை!

பன்முகத் தன்மைக்கும், சமுதாயத்திற்குள் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அனைத்து நல்ல விஷயங்களையும் சந்தீப் தாலிவால் பிரதிபலித்தார் என்று ஹூஸ்டன் நகர மேயர் சில்வெஸ்டர் ட்ரனர் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். டெக்சாஸ் கவர்னர் க்ரேக் அபார்ட் சந்தீப் தாலிவாலில் மரணம் மிகவும் துயரமான இழப்பு என்று கூறியுள்ளார். 

பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவரே சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது, பெரும் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

From around the web