சபரிமலை ட்ராமா!!

பெண்களுக்கு சம உரிமை உள்ளது. சபரிமலைக்கு ஆண்களைப் போலவே அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு கேரள அரசு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. தீர்ப்பை நடைமுறைப்படுத்துவோம், அனைத்துப் பெண்களும் சபரிமலைக்குச் சென்று அய்யப்பனை வழிபட வகை செய்வோம் என்று அறிவித்தது. ஆனால் பாஜகவின் தூண்டுதல் மற்றும் மதவாத சக்திகள் ‘அய்யப்ப பக்தர்கள்’ என்ற போர்வையில் கடும் எதிர்ப்பைக் காட்டின. தீர்ப்புக்குப் பிறகு கடந்த அக்டோபர் 17-ம் தேதி
 

பெண்களுக்கு சம உரிமை உள்ளது. சபரிமலைக்கு ஆண்களைப் போலவே அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்புக்கு கேரள அரசு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. தீர்ப்பை 
நடைமுறைப்படுத்துவோம், அனைத்துப் பெண்களும் சபரிமலைக்குச் சென்று அய்யப்பனை வழிபட வகை செய்வோம் என்று அறிவித்தது. ஆனால் பாஜகவின் தூண்டுதல் மற்றும் மதவாத சக்திகள் ‘அய்யப்ப பக்தர்கள்’ என்ற போர்வையில் கடும் எதிர்ப்பைக் காட்டின.

தீர்ப்புக்குப் பிறகு கடந்த அக்டோபர் 17-ம் தேதி சபரிமலை நடைத் திறக்கப்பட்டது. பெண் பக்தர்கள் திரளாக வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் வெகு சில பெண்களே சபரிமலைக்கு வரத் துணிந்தனர். அப்படி வந்தவர்களையும் கடுமையாக எதிர்த்தனர் ‘அய்யப்ப பக்தர்கள்’. சபரிமலையில் குவிக்கப்பட்டுள்ள பல நூறு போலீசாரும் இந்த எதிர்ப்புக்கு பணிந்து, பெண் பக்தர்களை திருப்பி அனுப்பினர்.

சபரிமலை நடைத் திறந்திருந்த 5 நாட்களும் யாராவது ஓரிரு பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்துக்கு வருவதும், அங்கு நிரந்தரமாக டேரா அடித்துள்ள ‘அய்யப்ப பக்தர்கள்’ அவர்களை எதிர்ப்பதும், பின்னர் போலீசார் அந்தப் பெண்களை வந்த வழியே திருப்பி அழைத்துச் செல்வதும் தொடர்ந்தது. இந்த 5 நாட்களில் மொத்தம் 11 பெண்கள் சபரிமலைக்கு வந்து, தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் சென்றனர். அதாவது. இதுவரை பெண்கள் யாரையுமே உள்ளே அனுமதிக்காமல் வெற்றிகரமாகப் பார்த்துக் கொண்டது தேவசம்போர்டு, பந்தள மன்னர் குடும்பம், சபரிமலை தந்திரிகள் மற்றும் கேரள அரசு!

இன்னொரு பக்கம், பெண்கள் அய்யப்பனை தரிசிக்க வந்தால் சபரிமலை சன்னிதானத்தைப் பூட்டி சாவி்யை ஒப்படைத்துவிடுவேன் என மிரட்டிக் கொண்டிருக்கிறார் அந்த கோவிலின் தந்திரி. இந்த மாதிரி தனி நபர் மிரட்டல்களை அமைதியாக அனுமதிக்கிறது கேரள அரசு.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பது போல ஒரு பக்கம் போக்குக் காட்டும் கேரள அரசு, இன்னொரு பக்கம் ‘அய்யப்ப பக்தர்’களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கிறோம் என்ற பெயரில் அதே உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் வேடிக்கைப் பார்க்கிறது என்பதுதான் உண்மை. ஒருவகையில் இது திட்டமிட்ட நாடகம். இதைவிட, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடே செய்திருக்கலாம்.

உண்மையிலேயே பெண் பக்தர்களை சபரிமலை சன்னிதானத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என கேரள அரசு நினைத்திருந்தால், கேரள போலீஸ் செய்திருக்க வேண்டியது என்ன? பக்தர்கள் என்ற பெயரில் அங்கே முகாமிட்டிருக்கும் சில நூறு பேர்களை விரட்டியடித்துவிட்டு பெண்களை சுதந்திரமாக தரிசனம் செய்ய விட்டிருக்கலாமே?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் கேரள அரசு உண்மையிலேயே உறுதியாக உள்ளது என்பதை உணர்ந்தாலே போதுமே, தந்திரியாவது மந்திரியாவது… அனைவரும் வாயை மூடிக் கொண்டு அவரவர் வேலையை மட்டும் பார்ப்பார்களே..!

சட்டமும் தீர்ப்பும் சாதாரண மனிதர்களுக்கு மட்டும்தானா?

– முதன்மை ஆசிரியர்
வணக்கம் இந்தியா

From around the web