சாமி ஸ்கொயர் விமர்சனம்

பொதுவாக தமிழ் சினிமாவில் வெற்றிப் பெற்ற படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதாக அறிவிப்பார்கள். ஆனால் அது பெயரளவுக்கு, அதாவது டைட்டிலில் மட்டும்தான் இருக்கும். முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனால் இயக்குநர் ஹரி அப்படியல்ல. முதல் பாகத்தின் கதை முடியும் இடத்திலிருந்து இரண்டாம் பாகத்தைக் கச்சிதமாக ஆரம்பிப்பார். சிங்கம் தொடர் வரிசைப் படங்கள் அதற்கு நல்ல உதாரணம். அந்த வரிசையில் இப்போது சாமி 2. சாமி முதல் பாக க்ளைமாக்சில் வில்லன் பெருமாள் பிச்சையை
 


பொதுவாக தமிழ் சினிமாவில் வெற்றிப் பெற்ற படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதாக அறிவிப்பார்கள். ஆனால் அது பெயரளவுக்கு, அதாவது டைட்டிலில் மட்டும்தான் இருக்கும். முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனால்
இயக்குநர் ஹரி அப்படியல்ல. முதல் பாகத்தின் கதை முடியும் இடத்திலிருந்து இரண்டாம் பாகத்தைக் கச்சிதமாக ஆரம்பிப்பார். சிங்கம் தொடர் வரிசைப் படங்கள் அதற்கு நல்ல உதாரணம். அந்த வரிசையில் இப்போது சாமி 2.

சாமி முதல் பாக க்ளைமாக்சில் வில்லன் பெருமாள் பிச்சையை செங்கல் சூளையில் வைத்து எரித்துவிட்டு, தலைமறைவாகிவிட்டதாக ஆறுச்சாமி செய்தி பரப்பிவிடுவார். இரண்டாம் பாகத்தின் கதை அதிலிருந்தே தொடங்குகிறது. விவரம் அறிந்த பெருமாள் பிச்சையின் மகன் பாபி சிம்ஹா இலங்கையிலிருந்து திரும்பி வந்து ஆறுச்சாமியையும் அவர் கர்ப்பிணி மனைவி ஐஸ்வர்யா ராஜேஷையும் கொடூரமாகக் கொல்கிறார். ஐஸ்வர்யா கொல்லப்பட்ட அரை மணி நேரம் கழித்து அவர் வயிற்றிலிருந்து
பிறக்கும் குழந்தைதான் ராமசாமி. ஐஏஎஸ் தேர்ச்சி பெறும் ராமசாமி, விரும்பி ஐபிஎஸ் பயிற்சி பெறுகிறார். அதே திருநெல்வேலி டவுனுக்கு போலீஸ் அதிகாரியாக வந்து பாபி சிம்ஹாவை எப்படிப் பழிவாங்குகிறார் என்பதுதான் இரண்டாம் பாகம்.

இது ஹரியின் படம். தனது வழக்கமான பாணியிலிருந்து இம்மி்யும் மாறாமல் இந்தப் படத்தையும் தந்திருக்கிறார் ஹரி. முதல் பாதியில் பரபரவென ஓடுகின்றன காட்சிகள். இரண்டாம் பாதியில் சற்று தொய்வு. காரணம் சூரியின் மொக்கை காமெடி. அவர்
என்ன செய்வார்… வச்சிக்கிட்டு வஞ்சகமா பண்றார்!

சாமி முதல் பாகம் மாதிரி இந்தப் படம் இல்லையே என்பதுதான் பலரும் சொல்லக் கூடும். சாமி வெளியான காலகட்டத்தில் போலீஸ் படங்களிலேயே அது ரொம்ப வித்தியாசமானதாக இருந்தது. ஆனால் இந்த 15 ஆண்டுகளில் வெரைட்டியான போலீஸ்
கதைகளை மக்கள் பார்த்துவிட்டார்கள். அதனால் ஒருவேளை இந்தப் படம் சற்று சலிப்பைத் தரலாம். ஆனால் ஒரு இயக்குநராக தான் எடுத்துக் கொண்ட ஸ்க்ரிப்டை பக்கா பொழுதுபோக்குப் படமாகத் தந்திருக்கிறார் ஹரி. அதே நேரம், அரதப் பழசான காதல்
காட்சிகளையெல்லாம் தவிர்த்திருக்கலாம். தமிழ் சினிமா ட்ரெண்ட் ரொம்ப மாறிடுச்சி ஹரி!

விக்ரம்… அதே ஆறுச்சாமியை இப்போதும் கண்முன் நிறுத்துகிறார். அபார உழைப்பு. உடலை இப்படி பராமரிப்பதில் விக்ரமுக்கு நிகர் அவரேதான். நடிப்பிலும் ஆக்ஷனிலும் பின்னி எடுக்கிறார். படம் முழுக்க தனி மனிதராகத் தாங்குகிறார்.

முதல் பாகத்தில் த்ரிஷா செய்த ரோல்தான் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு. கச்சிதமாகச் செய்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் வரும் பகுதிகள் அத்தனை சுவாரஸ்யமாக இல்லை. பாபிசிம்ஹாவின் வில்லன் தோற்றமும் நடிப்பும் மிரட்டுகிறது. ஆனால் பெருமாள் பிச்சை மாதிரி ஒரு வித்தியாசமான வில்லத்தனம் அவரிடம் இல்லை.

ஸ்ரீ தேவி பிரசாதின் இசையும் பாடல்களும் சுத்தமாக படத்தோடு ஒட்டவில்லை.

முதல் பாகத்தில் இருந்த நேர்த்தியான திரைக்கதை, குடும்பக் காட்சிகள், சமூக அக்கறைகொண்ட நகைச்சுவை, இனிமைான பாடல்கள், வித்தியாச வில்லன், புத்திசாலித்தனமும் வீரமும் கொண்ட ஹீரோ இவை எல்லாம் இந்த இரண்டாம் பாகத்தில்
மிஸ்ஸிங்.

Rating: 2.0/5.0

 

From around the web