அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 50 பைசா உயர்ந்தது!

மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 50 பைசா உயர்ந்துள்ளது. ஒரு டாலர் மதிப்பு 69 ரூபாய் 87 பைசா ஆக குறைந்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க டாலர் பிற வெளிநாட்டு பண மதிப்புகளிலும் குறைந்துள்ளதை, அடுத்து இந்திய ரூபாய்க்கு எதிராகவும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, அமெரிக்க மத்திய வங்கியின் சில முடிவுகளை எதிர்பார்த்து, சந்தையில் டாலருக்கான மதிப்பு பலவீனம் அடைந்துள்ளதால், இந்திய ரூபாய்க்கும் அந்த பலன்
 
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 50 பைசா உயர்ந்தது!
மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 50 பைசா உயர்ந்துள்ளது. ஒரு டாலர் மதிப்பு 69 ரூபாய் 87 பைசா ஆக குறைந்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க டாலர் பிற வெளிநாட்டு பண மதிப்புகளிலும் குறைந்துள்ளதை, அடுத்து இந்திய ரூபாய்க்கு எதிராகவும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
அதாவது, அமெரிக்க மத்திய வங்கியின் சில முடிவுகளை எதிர்பார்த்து, சந்தையில் டாலருக்கான மதிப்பு பலவீனம் அடைந்துள்ளதால், இந்திய ரூபாய்க்கும் அந்த பலன் கிடைத்துள்ளதாம்.  
 
கச்சா எண்ணெய் விலை 57.07 டாலராக குறைந்துள்ளது. கடந்த 14 நான்கு மாத வரலாற்றில் இதுவே கச்சா எண்ணெய்யின் குறைந்த விலையாகும். இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததால், கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதன் பலன் இந்தியாவுக்கு கிடைக்கவில்லை.
 
சமீப காலத்தில் முதல் தடவையாக 70 ரூபாய்க்கும் கீழே அமெரிக்க டாலர் மதிப்பு வந்துள்ளது. இது நீடிக்குமா எனபது வரும் வாரத்தில் தெரியும்.
 
– வணக்கம் இந்தியா

From around the web