இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி ! கமலஹாசன், ஷங்கர் இழப்பீடு!!

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் இந்தியன். அதன் இரண்டாவது பாகமான இந்தியன் 2 கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு 2019ல் ஒரு வழியாக தொடங்கியது.பல்வேறு பிரச்சனைகளால் படப்பிடிப்பு மிகவும் மெதுவாகவே நடைபெற்று வந்தது. இதற்கு கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், பிக்பாஸ் போன்ற காரணங்கள் சொல்லப்பட்டன. இந்நிலையில் 2020 பிப்ரவரியில் கிரேன் சரிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே படப்பிடிப்பு தளத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து மிகப்பெரிய சர்ச்சைகளோடு
 

இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி ! கமலஹாசன், ஷங்கர் இழப்பீடு!!லக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் இந்தியன். அதன் இரண்டாவது பாகமான இந்தியன் 2 கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு 2019ல் ஒரு வழியாக தொடங்கியது.பல்வேறு பிரச்சனைகளால் படப்பிடிப்பு மிகவும் மெதுவாகவே நடைபெற்று வந்தது.

இதற்கு கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், பிக்பாஸ் போன்ற காரணங்கள் சொல்லப்பட்டன. இந்நிலையில் 2020 பிப்ரவரியில் கிரேன் சரிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே படப்பிடிப்பு தளத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து மிகப்பெரிய சர்ச்சைகளோடு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு எப்போது மறுபடியும் படப்பிடிப்பு தொடங்கும் என்றே தெரியாத நிலையில் கொரோனா அச்சத்தால் ஒட்டு மொத்த திரையுலகமும் முடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீட்டு தொகையை கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் படக்குழுவினர் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web