தூத்துக்குடியில் வறுமையில் வாடிய 150 கூலித்தொழிலாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள்! அசத்திய ரஜினி மக்கள் மன்றம்!!

மார்ச் 23 முதல் ஊரடங்கு உத்தரவால் வேலையில்லாமல் திண்டாடி வரும் 150 கூலித் தொழிலாளிகள் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான 23 மளிகைப் பொருட்களை ரஜினி மக்கள் மன்றத்தினர் வழங்கியுள்ளனர். தூத்துக்குடி – திருசெந்தூர் சாலையில் லெவிஞ்சிபுரத்தில் உள்ள ஒரு திடலில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசின் சமூகநலத்துறை தாசில்தார் பயாஸ் முன்னிலையில், அவருடைய அறிவுறுத்தலின் படி சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. திடல் முழுவதையும் சுத்தம் செய்து இரண்டு தடவை கிருமி
 

தூத்துக்குடியில் வறுமையில் வாடிய 150 கூலித்தொழிலாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள்! அசத்திய ரஜினி மக்கள் மன்றம்!!மார்ச் 23 முதல் ஊரடங்கு உத்தரவால் வேலையில்லாமல் திண்டாடி வரும் 150 கூலித் தொழிலாளிகள் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான 23 மளிகைப் பொருட்களை ரஜினி மக்கள் மன்றத்தினர் வழங்கியுள்ளனர்.

தூத்துக்குடி – திருசெந்தூர் சாலையில் லெவிஞ்சிபுரத்தில் உள்ள ஒரு திடலில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசின் சமூகநலத்துறை தாசில்தார் பயாஸ் முன்னிலையில், அவருடைய அறிவுறுத்தலின் படி சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

திடல் முழுவதையும் சுத்தம் செய்து இரண்டு தடவை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அங்கே ஒன்றரை மீட்டர் இடைவெளி விட்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. திடலுக்கு உள்ளே நுழைவதற்கு முன்னதாக, வாசலில் வைக்கப்பட்டிருந்த சானிட்டைசரில் கைகளை சுத்தம் செய்த பின்னரே பயனாளிகள் அனுமதிக்கப்பட்டனர்.

ஒருவர் பின் ஒருவராக சமூக இடைவெளி விட்டு வந்து நாற்காலியில் அமர்ந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் ரஜினிகாந்த் படம் பொறிக்கப்பட்ட முகக்கவசம் வழங்கப்பட்டது. முகக்கவசம் அணிந்து கொண்டு ஒவ்வொருவராக வந்து நிவாரணப் பொருட்களை வாங்கிச் சென்றார்கள்.

ஒவ்வொருவருக்கும் 23 மளிகைப் பொருட்கள் அடங்கிய பையுடன், ரஜினிகாந்த் படமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளைப் பார்வையிட்ட சமூகநலத்துறை தாசில்தார் பயாஸ், கும்பல் சேர விடாமல் உரிய சமூக இடைவெளி விட்டு, கிருமி நாசினி, சானிட்டைசர் உபயோகித்து அரசு வழிக்காட்டுதலை முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டதாக பாராட்டுத் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் வறுமையில் வாடிய 150 கூலித்தொழிலாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள்! அசத்திய ரஜினி மக்கள் மன்றம்!!

“பயனாளிகளில் 99 சதவீதம் பேர் தினக்கூலிகள். வேலையில்லாவிட்டால் சாப்பாடு இல்லை என்ற நிலையில் வாழ்பவர்கள், தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள மிகவும் பின் தங்கிய வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் இவர்கள். இறந்து போன ரசிகர்களின் குடும்பங்கள், வறுமை நிலையில் உள்ள தீவிர ரசிகர்கள், விதவைகள், ஆதரவற்றோருக்கும் சேர்த்து இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது,” என்று தூத்துக்குடி மாவட்ட தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் விஜய் ஆனந்த் தெரிவித்தார்.

2 லட்சம் ரூபாய் செலவிலான இந்த நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு செல்வசக்தி மெடிக்கல் டிரஸ்ட் சார்பிலும் நிதியுதவி வழங்கியிருந்தார்கள். ஆண்டு தோறும் இலவச மருத்துவ முகாம் நடத்தும் இந்த அறக்கட்டளையினர், தங்கள் அறப்பணிகளின் ஒரு பகுதியாக ரஜினி மக்கள் மன்றத்தின் இந்த நிவாரணப் பணியிலும் பங்கெடுத்துள்ளனர்.

தூத்துக்குடியில் வறுமையில் வாடிய 150 கூலித்தொழிலாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள்! அசத்திய ரஜினி மக்கள் மன்றம்!!

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட தொழில் நுட்ப அணி செயலாளர் M.விஜய் ஆனந்த், மாவட்ட துணைச் செயலாளர் T.S.P.S. சுவாமிநாதன், நகர இளைஞரணி செயலாளர் பாபா T.. ஜெயபால், Boss of Mass சிவசூரியன் , ரஜினி செந்தில் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் T.S.P.S. சக்திமுருகன், வர்த்தக அணி நிர்வாகிகள் அசோக், அந்தோணி சேவியர், ராஜன், முருகன், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் மேகலா பழனிமுருகன், தெற்கு மண்டல துணை செயலாளர் லட்சுமணன், தெற்கு மண்டல தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் ஹெர்பர்ட், வடக்கு மண்டல துணை செயலாளர் ஏகாம்பரம், கிழக்கு மண்டல துணை செயலாளர் அசோக், தெற்கு மண்டல மகளிரணி இணை செயலாளர் கஸ்தூரி, வட்ட செயலாளர்கள் ரொனால்டு, பில்லா மணி, செந்தில், அன்புதுரை உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

A1TamilNews.com

From around the web