குடிநீரைக் காய்ச்சிக் குடிக்கும் பாரம்பரிய முறைக்குத் திரும்பிய சென்னைவாசிகள்!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்களும், வீடு வீடாகத் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. கொரோனாவிற்கான ஆரம்ப அறிகுறி சளி மற்றும் இருமல், லேசான காய்ச்சல் ஆகியவை மட்டுமே கூறப்பட்டு வந்தன. இதையடுத்து கண் சிவப்பாக இருத்தல், பசியின்மை எனக் கூறப்பட்டன. தற்போது காற்றின் மூலம் பரவக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து இயற்கையான வழியில் தற்காத்துக்
 

குடிநீரைக் காய்ச்சிக் குடிக்கும் பாரம்பரிய முறைக்குத் திரும்பிய சென்னைவாசிகள்!மிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்களும், வீடு வீடாகத் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. கொரோனாவிற்கான ஆரம்ப அறிகுறி சளி மற்றும் இருமல், லேசான காய்ச்சல் ஆகியவை மட்டுமே கூறப்பட்டு வந்தன.

இதையடுத்து கண் சிவப்பாக இருத்தல், பசியின்மை எனக் கூறப்பட்டன. தற்போது காற்றின் மூலம் பரவக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து இயற்கையான வழியில் தற்காத்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகளை சென்னைவாசிகள் கடைப்பிடிக்கத் துவங்கியுள்ளனர்.

தற்போது பொதுமக்கள் தங்கள் வீடுகளில் குடிநீரை காய்ச்சி வடிகட்டி அதன் பின்னரே குடிக்கிறார்கள்.ஆர்.ஓ.வாட்டர் வைத்திருப்பவர்களும் கூட அந்த நீரையும் காய்ச்சிய பின்னரே குடிக்கின்றனர். பெரும்பாலான இடங்களில் சென்னையில் குடிநீருக்கு ‘கேன்’ வாட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ‘கேன்’களில் உள்ள குடிநீரையும், சுடவைத்து அதன் பின்னரே மக்கள் பருகி வருகின்றனர். அத்துடன் காலையில் எழுந்ததும் மஞ்சள் தூள், மிளகு, இஞ்சி கலந்த சுடு தண்ணீர் குடிப்பதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

கொரோனா அறிகுறிகளில் முக்கியமான தொண்டை வலி மற்றும் அது சார்ந்த பிரச்சினைகளை வெந்நீர் போக்கிவிடும் என்பதால், அனைத்து வீடுகளிலும் தற்போது வெந்நீர் குடிக்கும் பழைய நடைமுறை திரும்பவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

A1TamilNews.com

From around the web