வெளிநாட்டில் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி ஜூன் 13 வரை தொடரும்!

கொரோனாவால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவர மத்திய அரசு வந்தே பாரத் மிஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை உலகம் முழுவதும் 98 நாடுகளில் வசித்து வரும் 3லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம் முதல் கட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது கட்ட நீட்டிப்பு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த நீட்டிப்பில்
 

வெளிநாட்டில் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி ஜூன் 13 வரை தொடரும்!கொரோனாவால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவர மத்திய அரசு வந்தே பாரத் மிஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை உலகம் முழுவதும் 98 நாடுகளில் வசித்து வரும் 3லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ளனர்.

இந்தத் திட்டத்தின் மூலம் முதல் கட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது கட்ட நீட்டிப்பு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்த நீட்டிப்பில் உலகம் முழுவதும் 47 நாடுகளில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதே போல் கடல் வழிப்பயணம் மூலமாகவும் வெளிநாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்படுகின்றனர்.

இதுவரை வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்த 15000 தொழிலாளர்கள் 64 விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, கனடா, ஜப்பான், நைஜிரியா, கஜகஸ்தான், உக்ரைன், கிர்கிஸ்தான், பெலாரஸ், ஜார்ஜியா, தஜிகிஸ்தான், ஆர்மீனியா ஆகிய 18 நாடுகளில் சிக்கிக் கொண்டிருக்கும் 32000 இந்தியர்கள் தாயகம் திரும்ப இருக்கின்றனர்.

இந்த மீட்பு நடவடிக்கைகளில் தனியார் விமானங்களும் பங்கேற்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியர்கள் வாழ்ந்து வரும் அனைத்து நாடுகளின் அரசுகளுடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியர்களை அழைத்துவரும் பணியில் வெளியுறவுத்துறை, சுகாதாரத்துறை, உள்துறை, விமானப்போக்குவரத்து துறை, குடியேற்றத்துறை போன்ற அனைத்துத் துறைகளும் இணைந்து சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றன என்று மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web