ட்வீட்களை நீக்கும்படி ட்விட்டர் நிறுவனத்திடம் கெஞ்சும் மத்திய அரசு!

டெல்லி: பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் பதிவிட்டப்பட்ட ட்வீட்களை நீக்குவதற்கு இந்திய அரசிடமிருந்து அதிக அளவில் கோரிக்கை வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ட்விட்டர் பக்கத்தை நீக்கக்கோரியும், ட்வீட்களை தடை செய்யக்கோரியும் இந்திய அரசு மற்றும் காவல்துறையிடமிருந்து இதுவரை 5 ஆயிரத்து 614 கோரிக்கைகள் நீதிமன்றத்தின் மூலம் ட்விட்டர் நிறுவனத்திற்கு வந்துள்ளது. அதன்படி 644 ட்வீட்கள், 132 கணக்குகள் மற்றும் 29 பதிவுகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகிலேயே ட்விட்டர் தொடர்பாக
 

டெல்லி: பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் பதிவிட்டப்பட்ட ட்வீட்களை நீக்குவதற்கு இந்திய அரசிடமிருந்து அதிக அளவில் கோரிக்கை வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ட்விட்டர்‌ பக்கத்தை நீக்கக்கோரியும், ‌ட்வீட்களை தடை செய்யக்கோரியும் இந்திய அரசு மற்றும் காவல்துறையிடமிருந்து இதுவரை 5 ஆயிரத்து 614 கோரிக்கைகள் நீதிமன்றத்தின் மூலம் ட்விட்டர் நிறுவனத்திற்கு வந்துள்ளது.

அதன்படி 644 ட்வீட்கள், 132 கணக்குகள் மற்றும் 29 பதிவுகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகிலேயே ட்விட்டர் தொடர்பாக இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைப்பதில் இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

இது கடந்த 5 ஆண்டுகளில் 100 மடங்கு அதிகரித்துள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கோரிக்கையையடுத்து தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் பிரிவு 69 (ஏ) இன் சட்டப்பிரிவின் கீழ், அரசியல் தொடர்பான சர்ச்சை கருத்துகளை பதிவிட்ட கணக்குகள், சமூகத்திற்கு குந்தகத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை பதிவிட்ட கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது.

உதாரணமாக காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிராக கருத்து ‌‌‌தெரிவித்த ஏராளமான கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதேபோல சர்ச்சைக்குரிய ஏராளமான ஹேஷ்டேக்குகளும் தடை செய்யப்பட்டன.

இந்த விஷயத்தில் யாருக்கும் பாரபட்சம் பார்ப்பதில்லை எனக்கூறும் ட்விட்டர் நிறுவனம், காரணமே இல்லாமல் வலதுசாரி வர்ணனையாளர் அங்கூர் சிங்கின் கணக்கை கடந்த ஜனவரி மாதம் பிளாக் செய்ததாகவும், அதன்பின் அன்பிளாக் செய்ததாகவும் தெரிவித்துள்ளது. அங்கூர் சிங்கை பிரதமர் மோடி உட்பட 5‌3 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர்.

– வணக்கம் இந்தியா

From around the web