ஒரு பாதிக் கதவு! கவிஞர் நா.முத்துக்குமார் நினைவுகள்!!

என் வாழ்வில், கவிதை படிக்கும் போதும் பாடல்கேட்கும்போதும் மட்டுமே உள்ளம் உயிர் கொண்டது போலிருக்கும். திரைப்பாடல்கள் கேட்கும் பொழுது பாடலின்பொருளையும், புதுப்புது வார்த்தைக் கையாடல்களையும் எண்ணி வியப்புடன் பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லிச்சொல்லித் திரிந்த என்னை மயக்குறச் செய்த கற்பனை, வார்த்தைப்பயன்பாடு, எளிமை எனப் பல்வேறு வகையிலும்தனிப்பெரும் ஆளுமையாய் இருந்தவர் கவிஞர். நா.முத்துக்குமார். புகழின் உச்சத்தில் இருந்த கவிஞரின் அறிமுகமும், அருகாமையும் கிடைக்கப் பெற்றது, தாய்மொழி தமிழ் எனக்குத் தந்த கொடை. அவரது கவிதைளைப் போலவே எளிமையான, எதார்த்தமான மனிதர். இயல்பாக மட்டுமே வாழத்தெரிந்த வாழ முடியாது போனவர். அவரைப் பார்க்கும்போது எழுந்த எண்ணங்கள் பழகியபின் மாறிப்போனது. அவரது வெற்றிக்குக் காரணம் இன்றுவரை சிறந்த படிப்பாளி என்பதுதான். படித்த நூல்களைக் கூடப் புதிதாகப் படிப்பதுபோல் திரும்பத் திரும்பப் படிக்கும் பழக்கம் கண்டு வியந்தேன். தமிழ்ப் படைப்புலகம் பாரதி தொடங்கி இவரைப் போன்ற பலரை இழந்து கொண்டே இருப்பது பெரும்சாபம். கவிதை உலகில் அவர் திறக்காமல் சென்ற பாதிக்கதவும், அவரது வார்த்தைகளுக்காகக் கவியுலக முன்றிலும் காத்துக்கிடக்கிறது. சாவை உணர்ந்திட வேண்டும் என்றவன் அதன் வலியை உணர்த்திச் சென்றவன் நீ தொடாத சொற்கள் காத்திருக்கும் வேறு யார்
 

ஒரு பாதிக் கதவு! கவிஞர் நா.முத்துக்குமார் நினைவுகள்!!என் வாழ்வில், கவிதை படிக்கும் போதும் பாடல்கேட்கும்போதும் மட்டுமே உள்ளம் உயிர்  கொண்டது போலிருக்கும்.  திரைப்பாடல்கள்  கேட்கும் பொழுது பாடலின்பொருளையும்,  புதுப்புது வார்த்தைக் கையாடல்களையும் எண்ணி வியப்புடன் பார்ப்பவர்களிடம் எல்லாம்  சொல்லிச்சொல்லித்  திரிந்த என்னை மயக்குறச் செய்த கற்பனை,  வார்த்தைப்பயன்பாடு,  எளிமை எனப் பல்வேறு வகையிலும்தனிப்பெரும் ஆளுமையாய் இருந்தவர்  கவிஞர். நா.முத்துக்குமார்.

புகழின் உச்சத்தில் இருந்த கவிஞரின் அறிமுகமும், அருகாமையும் கிடைக்கப் பெற்றது, தாய்மொழி தமிழ் எனக்குத் தந்த கொடை. அவரது கவிதைளைப் போலவே எளிமையான,  எதார்த்தமான மனிதர். இயல்பாக மட்டுமே வாழத்தெரிந்த  வாழ  முடியாது  போனவர். அவரைப் பார்க்கும்போது எழுந்த எண்ணங்கள் பழகியபின் மாறிப்போனது. 

அவரது வெற்றிக்குக் காரணம் இன்றுவரை சிறந்த படிப்பாளி என்பதுதான். படித்த  நூல்களைக் கூடப் புதிதாகப் படிப்பதுபோல் திரும்பத் திரும்பப் படிக்கும் பழக்கம் கண்டு  வியந்தேன்.  தமிழ்ப் படைப்புலகம் பாரதி தொடங்கி இவரைப் போன்ற பலரை  இழந்து கொண்டே இருப்பது பெரும்சாபம்.

கவிதை உலகில் அவர் திறக்காமல் சென்ற பாதிக்கதவும், அவரது வார்த்தைகளுக்காகக்  கவியுலக முன்றிலும் காத்துக்கிடக்கிறது.

சாவை உணர்ந்திட வேண்டும் என்றவன்
அதன் வலியை உணர்த்திச் சென்றவன்

நீ தொடாத சொற்கள் காத்திருக்கும்
வேறு யார் கற்பனைக்கும் எட்டாமல் என்றும்.

கவிதைத் தமிழ் மீட்ட
கவிஞா வா மீண்டு.

– முனைவர். சித்ரா மகேஷ் , யு.எஸ்.ஏ.

A1TamilNews.com

From around the web