குடும்பப்படங்களை எடுத்த நடிகர் விசுவின் இறுதிச் சடங்கில் அவரது பெண்கள் கலந்துக்க முடியாத சோகம்!

தமிழ்த் திரையுலகில் தனது முத்திரைக் குடும்ப படங்களுக்குப் பெயர் பெற்று பிரபலமான நடிகர் மற்றும் இயக்குநர் விசுவின் மூன்று மகள்களும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருவதால், அவரது இறுதிச் சடங்கில் அவர்களால் கலந்து கொள்ள முடியாத இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. நடிகர், எழுத்தாளர், இயக்குநர், நாடக நடிகர், தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட விசு, 1945ம் ஆண்டு பிறந்தவர். இவரது முழுபெயர் M.R விஸ்வநாதன். முதன்முதலில் கே.பாலசந்தரிடம் துணை இயக்குநராக பணியாற்றிய போது சிறுசிறு கதாபாத்திரங்களில் நடிக்கத்
 

குடும்பப்படங்களை எடுத்த நடிகர் விசுவின் இறுதிச் சடங்கில் அவரது பெண்கள் கலந்துக்க முடியாத சோகம்!தமிழ்த் திரையுலகில் தனது முத்திரைக் குடும்ப படங்களுக்குப் பெயர் பெற்று பிரபலமான நடிகர் மற்றும் இயக்குநர் விசுவின் மூன்று மகள்களும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருவதால், அவரது இறுதிச் சடங்கில் அவர்களால் கலந்து கொள்ள முடியாத இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.

நடிகர், எழுத்தாளர், இயக்குநர், நாடக நடிகர், தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட விசு, 1945ம் ஆண்டு பிறந்தவர். இவரது  முழுபெயர் M.R விஸ்வநாதன். முதன்முதலில் கே.பாலசந்தரிடம் துணை இயக்குநராக பணியாற்றிய போது சிறுசிறு கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். விசு நடித்த முதல்படம் ரஜினியின் தில்லு முல்லு. அந்தப் படத்தில் இவர் டப்பிங்கும் செய்துள்ளார்.

சமீபகாலமாக சிறுநீரக பிரச்னைக்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த நடிகர் விசு, நேற்று மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் திரைத்துறையினர் மற்றும் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

விசு , உமா தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் மூவரும் திருமணம் முடிந்து தற்போது அமெரிக்காவில் வசித்து  வருகின்றனர்.  கொரோனா பரவுவதை தடுக்க சென்னையில் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.

அதே போல் வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்காவில் இருக்கும் விசுவின் மகள்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலை உருவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.A1TamilNews.com

 

From around the web