வீடு தேடி ரேஷன் பொருட்கள்! மாநில அரசுகளுக்கு ராம்விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தல்!

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார். அஸ்ஸாம், பீகார், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது மழை, வெள்ளத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் பொதுமக்களில் பலர் தங்களது வீடுகளையும், உடைமைகளையும் இழந்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனா். மழை பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மக்கள் ரேஷன்
 

வீடு தேடி ரேஷன் பொருட்கள்! மாநில அரசுகளுக்கு ராம்விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தல்!ழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.

அஸ்ஸாம், பீகார், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது மழை, வெள்ளத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் பொதுமக்களில் பலர் தங்களது வீடுகளையும், உடைமைகளையும் இழந்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனா்.

மழை பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மக்கள் ரேஷன் பொருள்களைக் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த மாதிரியான இடங்களில் மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புரிந்து கொண்டு அரசு அளிக்கும் இந்த உதவிகள் முழுமையாக தேவைப்படும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்றார் பாஸ்வான்

A1TamilNews.com

From around the web