மத்திய அரசு அதிரடி…!வெங்காய விலை குறையுமா……!

மகாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பருவ மழை தவறியதால், வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது..தற்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.140 க்கும், பெரிய வெங்காயம்.100 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை
 

மத்திய அரசு அதிரடி…!வெங்காய விலை குறையுமா……!

காராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பருவ மழை தவறியதால், வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும்  வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 க்கும் மேல்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது..தற்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.140 க்கும், பெரிய வெங்காயம்.100 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன் முதல் கட்டமாக வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை அதிக அளவில் இறக்குமதி செய்யலாம் என மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. வெங்காயம் ஏற்றுமதிக்குத் தடை, வியாபாரிகள், வெங்காயத்தை இருப்பு வைக்க உச்சவரம்பு, விலையைக் கண்காணிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அமைச்சர்கள் குழு எனப் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எம்.எம்.டி.சி., மாநிலங்களுக்கு விநியோகம் செய்வதற்காக, வெங்காயத்தை இறக்குமதி செய்து வருகிறது. எகிப்து  நாட்டிலிருந்து  முன்னதாகவே 7000 டன்  ஆர்டர் கொடுத்த நிலையில் , மேலும் 11,000 டன் வெங்காயத்தைத் துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யவும் எம்.எம்.டி.சி. `ஆர்டர்’ கொடுத்துள்ளது. இந்த ஆர்டர் வரும் வேளையில் வெங்காயம் விலை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது. அத்தோடு . கடந்த நவம்பர் 20-ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு 1.20 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்திருப்பதும்  குறிப்பிடத்தக்து.

https://www.A1TamilNews.com

From around the web