ராட்சசன் விமர்சனம்

நடிகர்கள்: விஷ்ணு விஷால், அமலா பால், முனிஸ்காந்த், நிழல்கள் ரவி, சூசன் ஜார்ஜ் ஒளிப்பதிவு: பி வி ஷங்கர் இசை: ஜிப்ரான் தயாரிப்பு: ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி – ஸ்கைலார்க் எண்டர்டெயின்மண்ட் இயக்கம்: ராம்குமார் சமீபகாலமாக நகைச்சுவைக் கலந்த ஆக்சன் படங்களில் நடித்து வந்த விஷ்ணு விஷால் ராட்சசன் படத்தில் சீரியஸ் ட்ராக்குக்கு மாறி இருக்கிறார். அப்பா போலீஸ் அதிகாரி என்பதால் பழக்கப்பட்ட களத்துக்கே திரும்பியிருக்கிறார் போலிருக்கிறது. கதை ரொம்ப சிம்பிள். பள்ளிச் சிறுமிகளாகப் பார்த்து தொடர்ந்து
 

ராட்சசன் விமர்சனம்
டிகர்கள்: விஷ்ணு விஷால், அமலா பால், முனிஸ்காந்த், நிழல்கள் ரவி, சூசன் ஜார்ஜ்

ஒளிப்பதிவு: பி வி ஷங்கர்

இசை: ஜிப்ரான்

தயாரிப்பு: ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி – ஸ்கைலார்க் எண்டர்டெயின்மண்ட்

இயக்கம்: ராம்குமார்

சமீபகாலமாக நகைச்சுவைக் கலந்த ஆக்சன் படங்களில் நடித்து வந்த விஷ்ணு விஷால் ராட்சசன் படத்தில் சீரியஸ் ட்ராக்குக்கு மாறி இருக்கிறார். அப்பா போலீஸ் அதிகாரி என்பதால் பழக்கப்பட்ட களத்துக்கே திரும்பியிருக்கிறார் போலிருக்கிறது.

கதை ரொம்ப சிம்பிள். பள்ளிச் சிறுமிகளாகப் பார்த்து தொடர்ந்து கொடூரமாக கொன்று உடல்களை குப்பைத்தொட்டி, சாக்கடை, பாலங்கள் என எங்காவது வீசிவிட்டுச் செல்கிறான் ஒரு சைக்கோ கொலைகாரன். அந்தக் கொலைகாரன் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது ஒட்டு மொத்த காவல்துறை. புதிதாக சப் இன்ஸ்பெக்டர் வேலைக்கு சேரும் விஷ்ணு விஷால் அந்தக் கொலையாளியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரது மேலதிகாரிகள் அதற்கு ஏகப்பட்ட இடைஞ்சல்கள் செய்கிறார்கள். இதையெல்லாம் மீறி கொலையாளியை விஷ்ணு விஷால் எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பது கிளைமாக்ஸ்.

விறுவிறுப்பாக சொல்லவேண்டிய இந்தக் கதையை ஒரு டிவி சீரியல் போல இழுத்திருக்கிறார் இயக்குநர் ராம்குமார். முனிஸ்காந்தின் மகள் கொள்ளப்படுவதும், கொலையாளி யார் என்பது தெரிந்த பின்பும் அரைமணி நேரத்துக்கு மேல் ஜவ்வாக இழுத்திருப்பதும் படத்தின் மிகப் பெரிய மைனஸ்.

காவல் துறையில் மேலதிகாரிகளுக்கும் அவர்களின் கீழ் பணியாற்றுபவர்களுக்கும் இடையே நிலவும் ஈகோ மோதல்கள் ஒரு கேஸை எப்படியெல்லாம் திசைத் திருப்பும் என்பதை முடிந்தவரை நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

படம் முழுக்க முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு வருகிறார் விஷ்ணு விஷால். பெண் மேலதிகாரியிடம் தன் ஐடியாக்களை சொல்லி அவமானப்படும் போதும், தான் தூக்கி வளர்த்த அக்கா மகளை பிணமாக தூக்கி செல்லும் போதும் உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ராட்சசன் விமர்சனம்

நாயகி அமலா பாலுக்கு பெரிய வேலை எதுவும் இல்லை. அவரது அக்கா மகளாக வரும் அந்தக் குழந்தை படுச்சுட்டி.

வில்லனாக வருபவர் கிட்டத்தட்ட இருமுகனில் வரும் பெண் வேடம் போட்ட விக்ரம் மாதிரி தெரிகிறார். விஷ்ணுவுடன் மோதும் காட்சிகளில் அவர் செய்யும் மேஜிக் புதிதாக இருந்தாலும், அதுவே நீண்டநேரம் தொடர்வதால் அலுப்புத் தட்டுகிறது.

முனிஸ்காந்த், நிழல்கள் ரவி, பெண்ணதிகாரியாக வரும் சூசன் ஜார்ஜ், அந்த காம வெறி பிடித்த வாத்தியார் என அனைவரும் தங்கள் வேடத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.

காளி வெங்கட் மோட்டார் பைக்கில் சுற்றிக் கொண்டே இருக்கிறார். விஷ்ணு விஷால் அத்தனை முறை சொல்லியும் வில்லனை சுடாமல் தயங்கிக் கொண்டே இருப்பது ஏன்?

பி வி ஷங்கரின் ஒளிப்பதிவில் குறை இல்லை. 

ஆனால் ஜிப்ரான் இசை எடுபடவில்லை.

முண்டாசு பட்டி என்ற படு கலகலப்பான படத்தை தந்த இயக்குநர் ராம்குமாரிடம் இருந்து இப்படி ஒரு சீரியஸ் இழுவையை எதிர்ப்பாக்கவில்லை. ஒரு மணி நேரக் காட்சிகளை பாரபட்சமின்றி வெட்டியெறிந்திருந்தால், ராட்சசன் பக்கா த்ரில்லராக வந்திருக்கும்.

Rating: 2.5/5.0

 

From around the web