6 மாதத்தில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடக்கம்!

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடம் குறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, அங்கு ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. ராமர் கோவில் கட்டுவதற்காக ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த் ஷேத்திரா ட்ரஸ்ட் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்த அமைப்பின் தலைவராக மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் இருக்கிறார். அடுத்த 6 மாதத்திற்குள் ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கும் என்று கோபால் தாஸ் அறிவித்துள்ளார். ட்ரஸ்டின்
 

6 மாதத்தில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடக்கம்!யோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடம் குறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, அங்கு ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன.

ராமர் கோவில் கட்டுவதற்காக ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த் ஷேத்திரா ட்ரஸ்ட் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்த அமைப்பின் தலைவராக மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் இருக்கிறார். 

அடுத்த 6 மாதத்திற்குள் ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கும் என்று கோபால் தாஸ் அறிவித்துள்ளார்.  ட்ரஸ்டின் மற்ற உறுப்பினர்களான தினேந்திரா தாஸ், டாக்டர்.அனில்குமார் மிஷ்ரா ஆகிய இருவரும்  கோபால் தாஸின் உறுதியை நிறைவேற்றுவோம் என்று கூறியுள்ளனர்.

பாஜக எம்.எல்.ஏ வேத் பிரகாஷ் குப்தாவும் ராமர் கோவில் அதற்காக உருவாக்கப்பட்ட ட்ரஸ்ட் மூலம் கட்டப்படும். உலகமெங்கிலிருந்தும் ராமர் பக்தர்கள் ராமர் கோவிலுக்கான ட்ரஸ்ட்க்கு நன்கொடை வழங்கி வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

ராமர் கோவில் ட்ரஸ்டின் தலைவர் கோபால் தாஸ், அரசிடமிருந்து எந்த நிதியுதவியும் கேட்க மாட்டோம். முழுக்கவும் பக்தர்களின் நன்கொடையால் மட்டுமே ராமர் கோவில் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ராமர் கோவிலுக்கான மாதிரி வடிவத்தை விஷ்வ ஹிந்து பரிஷத் 30 ஆண்டுகளுக்கு முன்னால் வடிவமைத்துள்ளது. அதே வடிவத்திலேயே கோவில் கட்டப்படும் என்றும் ராமர் கோவில் ட்ரஸ்டின் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார்.

http://www.A1TamilNews.com

From around the web