ரஜினிகாந்த் – கமல்ஹாசன் அரசியல்… சினிமாவில் ஹீரோவாக நடிப்பவர்கள் எல்லோரும் சி.எம். ஆகிவிட முடியுமா?

சினிமாவில் இரண்டு வகை நடிகர்கள் மிகுந்த புகழ் பெறுகிறார்கள். ஒன்று மிகுந்த திறமையாளர்கள் (Performance Based Artists). அதாவது, சிவாஜிகணேசன், கமல்ஹாசன், மம்மூட்டி, திலிப்குமார், நஷ்ருதின் ஷா,நானா படேகர், விக்ரம், சூர்யா போன்றவர்கள். தங்கள் பன்முகத் திறமையால் சினிமா ரசிகர்களை கட்டிப் போட்டவர்கள். இவர்கள் முழுக்க, முழுக்க தங்கள் திறமையால் பேசப்படுகிறவர்கள். நடிப்புத் திறமையை மட்டுமே முன்னிறுத்தி வந்தவர்கள். மக்கள் இவர்களை விரும்புவது இதே காரணங்களுக்காகத்தான். சாதாரண மசாலா படங்கள் நடித்தால் கூட அதில் இவர்கள் தங்கள்
 

ரஜினிகாந்த் – கமல்ஹாசன் அரசியல்… சினிமாவில் ஹீரோவாக நடிப்பவர்கள் எல்லோரும் சி.எம். ஆகிவிட முடியுமா?சினிமாவில் இரண்டு வகை நடிகர்கள் மிகுந்த புகழ் பெறுகிறார்கள். ஒன்று மிகுந்த திறமையாளர்கள் (Performance Based Artists). அதாவது, சிவாஜிகணேசன், கமல்ஹாசன், மம்மூட்டி, திலிப்குமார், நஷ்ருதின் ஷா,நானா படேகர், விக்ரம், சூர்யா போன்றவர்கள். தங்கள் பன்முகத் திறமையால் சினிமா ரசிகர்களை கட்டிப் போட்டவர்கள். இவர்கள் முழுக்க, முழுக்க தங்கள் திறமையால் பேசப்படுகிறவர்கள். நடிப்புத் திறமையை மட்டுமே முன்னிறுத்தி வந்தவர்கள்.

மக்கள் இவர்களை விரும்புவது இதே காரணங்களுக்காகத்தான். சாதாரண மசாலா படங்கள் நடித்தால் கூட அதில் இவர்கள் தங்கள் கதாபாத்திரத்தை வித்தியாசமாக செய்வார்கள். எவ்வளவு மொக்கை படமாக இருந்தாலும் இவர்கள் நடிப்பை யாரும் குறை கூற முடியாது. அதே சமயம் இவர்கள் பட வெற்றி தோல்விகளும் இதை வைத்தே நடக்கின்றன. இவர்கள் படத்தில் எல்லாம் சரியாக அமைந்தால் அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகும். இல்லை என்றால் ஒரு வாரம் கூட ஓடாது.

ஒன்று பெரிய வெற்றி அல்லது பெரும் தோல்வி. இவர்கள் ஒரு குறிப்பிட்ட பிம்பத்தில் எப்போதும் சிக்க மாட்டார்கள். பிம்ப கட்டமைப்பும் செய்யமாட்டார்கள். தங்கள் திறமைகள் மக்களால் அங்கீகரிக்கப்படுவதால் தங்களுக்கு பிடித்த கதைகளையே தேர்ந்தெடுப்பர். அவர்களுக்கும் பிடிக்கும் விதத்தில்தான் படம் நடிப்பார்கள். அதன் வெற்றி தோல்வி பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார்கள். இவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மக்கள் விமர்சிக்க மாட்டார்கள்.. ஏனெனில், இவர்களை மக்கள் திறமையான நடிகர்களாக மட்டுமே பார்க்கின்றனர், கொண்டாடுகின்றனர். அவ்வளவுதான்.

இன்னொரு வகை நடிகர்கள், மாஸ் ஹீரோக்கள். எம்ஜிஆர், என்.டி.ஆர். ராஜ்குமார், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, மோகன்லால் அஜித், விஜய் போன்றவர்கள். இதில் ராஜ்குமாரும், மோகன்லாலும் மட்டுமே இந்த இரண்டு வகையிலும் சேர்வார்கள். இவர்கள் முழுக்க, முழுக்க மக்களால் மட்டுமே தீர்மானிக்கப் படுபவர்கள். எந்த காரணமும் இன்றி மக்கள் இவர்களை விரும்புவார்கள், இனம் புரியாத ஈர்ப்பு மக்களுக்கு இவர்களிடம் எற்ப்படும்.

எந்த குறிப்பிட்ட காரணமும் இன்றி மக்களுக்கு இவர்களைப் பிடிக்கும். திரையில் பார்த்தால் போதும் என்று மக்கள் நினைப்பார்கள். பிற்பாடு இவர்கள் என்ன செய்தாலும் மக்களுக்கு பிடித்து விடும். இதை உணரும்போது ஒரு பிம்ப கட்டமைப்புக்குள் வந்துவிடுகின்றனர். அதாவது தங்களுக்கு பிடித்த கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்திவிட்டு, மக்களுக்கு பிடிக்கும் கதைகளை தேர்ந்தெடுக்க ஆர்ம்பிப்பார்கள். மக்களுக்கு தங்களிடம் என்ன பிடித்திருக்கிறது என்பதை கணித்து அதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்.

மக்களுக்கும், இவர்களுக்கும் ஒரு இயல்பான புரிதல் வந்துவிடும். ஒரே மாதிரியான படங்கள் நடித்தாலும் மக்கள் விரும்பி பார்ப்பார்கள். இவர்களுக்கும், Performance Oriented நடிகர்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் “ஓப்பனிங்” என்று சொல்லப்படும் முதல் வார அல்லது முதல் இரண்டு வாரங்களில் தியேட்டருக்கு வரும் கூட்டம். படம் வருவதற்கு முன்பே முதல் வார காட்சிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிடும். அதாவது படம் நன்றாக இருக்குமா என்பதை பற்றி எல்லாம் சிந்திக்காமல் தங்கள் நாயகர்களைப் பார்ப்பதற்காகவே மக்கள் தியேட்டருக்கு போகிறார்கள், என்பதற்கான மிகப் பெரிய சான்று இந்த ஓப்பனிங்.

அப்படி கிடைத்த வெற்றியை இவர்கள் அடுத்த கட்டத்துக்கு எப்படி எடுத்துசெல்கிறார்கள் என்பதும், கடைசிவரை வெற்றியாளர்களாகவே இருக்கிறார்களா என்பதும் திரைக்கு வெளியே உள்ள பிம்பத்தையும் வைத்தே நடக்கிறது. எம்ஜிஆர், என்.டி.ஆர் இருவரும் மக்களுக்கு தங்கள் மீதுள்ள ஈர்ப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போய் அரசியலில் நுழைந்து வெற்றி பெற்றனர்.

அமிதாப் தன் பாதையை மாற்றிக் கொண்டார். சிரஞ்சீவி தவறான ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது தேவையற்ற காலத்தில் அரசியலில் இறங்கி சூடுபட்டுக் கொண்டார். ராஜ்குமார் கடைசிவரை உச்ச நடிகராகவே இருந்து தன் மதிப்பை காப்பாற்றிக் கொண்டுவிட்டார். மோகன்லாலுக்கு அரசியல் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. ரஜினிகாந்த் அடுத்த கட்டத்துக்கு போவதற்கான வேலையை செய்து கொண்டிருக்கிறார்.கமல் ஹாசன் ஏற்கனவே கட்சி ஆரம்பித்து விட்டார்.

4 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யும் எடப்பாடி பழனிசாமியை, திமுகவின் புதிய தலைவர் மு.க. ஸ்டாலினை இவர்கள் வெல்ல முடியுமா? இருவரில் ஒருவர் தமிழ்நாடு முதல்வர் ஆவார்களா? அடுத்த முதல்வர் யார்? என்று தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே எதிர்நோக்கி இருக்கும் கேள்வி அது!

– மனோகரன்

A1TamilNews.com

 

From around the web