1991 தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை அமைக்க திட்டமிட்ட ராஜீவ் காந்தி!

தமிழக வரலாற்றில் 1967, 1977, 1991, 1996 சட்டமன்றத் தேர்தல்கள் வரலாற்று சிறப்பு மிக்கவை. கே-ப்ளான் என்ற திட்டத்தை முன் வைத்து இளையவர்களுக்கு வழிவிடுவதற்காக முதலமைச்சர் பதவியை 1963ம் ஆண்டு அக்டோபர் மாதம் பக்தவச்சலத்திடம் ஒப்படைத்தார். அதையடுத்து 1967ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று, பேரறிஞர் அண்ணா தலைமையில் முதன் முதலாக தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்றது. திமுகவிலிருந்து 1972ம் ஆண்டு பிரிந்து சென்ற எம்.ஜி.ஆரின் அதிமுக 1977ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தது. எம்.ஜி.ஆர் முதலமைச்சரானார்.
 

1991 தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை அமைக்க திட்டமிட்ட ராஜீவ் காந்தி!மிழக வரலாற்றில் 1967, 1977, 1991, 1996  சட்டமன்றத் தேர்தல்கள் வரலாற்று சிறப்பு மிக்கவை.  கே-ப்ளான் என்ற திட்டத்தை முன் வைத்து இளையவர்களுக்கு வழிவிடுவதற்காக முதலமைச்சர் பதவியை 1963ம் ஆண்டு அக்டோபர் மாதம் பக்தவச்சலத்திடம் ஒப்படைத்தார்.

அதையடுத்து 1967ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று,  பேரறிஞர் அண்ணா தலைமையில்  முதன் முதலாக தமிழகத்தில் திமுக  அரசு பதவியேற்றது. திமுகவிலிருந்து 1972ம் ஆண்டு பிரிந்து சென்ற எம்.ஜி.ஆரின் அதிமுக 1977ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தது. எம்.ஜி.ஆர் முதலமைச்சரானார்.

1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி எம்.ஜி.ஆர் மரணமடைந்த பிறகு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்களால் எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகி ஆட்சி விரைவிலேயே கவிழ்ந்தது. அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வேரூன்ற வைத்து விடலாம் என்று மூப்பனாரை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமித்தார். கவர்னர் ஆட்சி நீட்டிக்கப்பட்டது. பிரதமர் ராஜீவ் காந்தியை அடிக்கடி தமிழக விழாக்களில் காண முடிந்தது.

1989ம் ஆண்டு தேர்தலில் திமுக, காங்கிரஸ், அதிமுக -ஜா, அதிமுக-ஜெ நான்கு முனை போட்டியில் திமுக ஆட்சியைப் பிடித்தது. கருணாநிதி மீண்டும் முதலமைச்சர் ஆனார். மத்தியில் அமைந்த குறுகிய கால சந்திரசேகர் ஆட்சியின் போது 1991ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி திமுக ஆட்சி கலைக்கப் பட்டது. 

1991ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு அனுதாப அலை இருந்தது. மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் கருணாநிதி என்று நம்பப்பட்டது. ஜெயலலிதா அது வரையிலும் எந்த பெரிய  வெற்றியையும் பெறவில்லை.  இரண்டு அதிமுக அணியும் ஒன்றான நிலையில், ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தார் ராஜீவ் காந்தி. காங்கிரஸுக்கு 65  இடங்கள் ஒதுக்கப்பட்டது.

தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, அதிமுகவின் சார்பில் இரண்டாவது முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா பதவியேற்றார். ஜெயலலிதா முதலமைச்சர் ஆனது ராஜீவ் காந்தியின் மரணத்தால் ஏற்பட்ட அனுதாப அலையினால் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்தத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைப்பது தான் ராஜீவ் காந்தியின் திட்டமாம்.

பாராளுமன்றத் தேர்தலுடன் நடந்த சட்டமன்றத் தேர்தல் என்பதால் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என்று ஜெ தரப்பில் நம்பிக்கை இருந்தது. ஆனால் ராஜீவ் காந்தியோ, ஜெயலலிதாவுக்கு பெரும்பான்மை கிடைக்காது. காங்கிரஸ் கட்சி 40 இடங்களுக்கு மேல் வெற்றி பெரும். அதிமுக-காங்கிரஸ் கூட்டணி அரசு அமைக்கலாம் என்று திட்டமிட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக நாகர்கோவில் வந்த போது, காங்கிரஸ் சார்பாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட குமாரதாஸ், ராஜீவிடம் தனது மனக்குறையை சொல்லியிருக்கிறார். நாடாளுமன்றத்திற்கு போட்டியிட மனு செய்தேன். சட்டமன்ற தொகுதி ஒதுக்கியுள்ளார்களே என்று ராஜீவிடம் முறையிட்டுள்ளார் குமாரதாஸ்.

அதற்குப் பதிலளித்துள்ள ராஜீவ் ,”தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் வரும். உங்களை அமைச்சர் ஆக்குவதற்குத் தான் சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது,” என்று தன்னுடைய திட்டத்தையும் கூறியிருக்கிறார். 

ஆனால் வரலாறு வேறு திட்டத்தை வைத்திருந்தது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால், அனுதாப அலை காங்கிரஸ் கூட்டணிக்குத் திரும்பியது. 65 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 60 தொகுகளில் வென்றது. 168 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 164 தொகுதிகளில் வென்றது.

ஒரு வேளை, 1989ம் ஆண்டு போல் 1991 ம் ஆண்டிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு இருந்தால், ராஜீவ் அனுதாப அலை காங்கிரஸ் கட்சிக்கே முழுமையாக கிடைத்து ஆட்சியைப் பிடித்திருக்கலாம். ராஜீவ் மரணமடையவில்லை என்றால் ஒரு வேளை கூட்டணி ஆட்சியோ அல்லது திமுக ஆட்சியோ அமைந்திருக்கலாம்.

1991ம் ஆண்டு அசுர வெற்றி ஜெயலலிதாவை தமிழ்நாட்டின் முக்கிய ஆளுமையாக மாற்றி விட்டது. இதே ஜெயலலிதா 1996ம் ஆண்டு சொந்தத் தொகுதியில் படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்த வரலாறும் நடந்தது. ஒரு வேளை மீண்டும் ஜெயலலிதா 1996ல் வெற்றி பெற்றிருந்தால்?

-மணி

A1TamilNews.com

 

From around the web