சூப்பர் ஸ்டார் தலைவர்168! ஷூட்டிங் ஆரம்பம்!

ரஜினி ரசிகர்கள் தர்பார் டிரைலரை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் அடுத்த கொண்டாட்டமாக தலைவர் 168 ஷூட்டிங் இன்று தொடங்டியுள்ளது. சூப்பர் ஸ்டாரின் முந்தைய படங்களான எந்திரன் மற்றும் பேட்ட படங்களைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் தலைவர் 168 படத்தையும் தயாரிக்கிறது.இப்படத்திற்கான பூஜை டிசம்பர் 11ல் சன் ஸ்டூடியோவில் போடப்பட்டது. ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, இயக்குநர் சிவா, இசையமைப்பாளர் இமான் உள்பட பலர் இப்பூஜையில் கலந்து கொண்டனர். இப்பட பூஜையின் போது ரஜினியின் பிறந்த நாளும் கேக் வெட்டி
 

சூப்பர் ஸ்டார் தலைவர்168! ஷூட்டிங் ஆரம்பம்!ஜினி ரசிகர்கள் தர்பார் டிரைலரை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் அடுத்த கொண்டாட்டமாக தலைவர் 168 ஷூட்டிங் இன்று தொடங்டியுள்ளது.

சூப்பர் ஸ்டாரின் முந்தைய படங்களான எந்திரன் மற்றும் பேட்ட படங்களைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் தலைவர் 168 படத்தையும் தயாரிக்கிறது.இப்படத்திற்கான பூஜை டிசம்பர் 11ல் சன் ஸ்டூடியோவில் போடப்பட்டது. ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, இயக்குநர் சிவா, இசையமைப்பாளர் இமான் உள்பட பலர் இப்பூஜையில் கலந்து கொண்டனர்.

இப்பட பூஜையின் போது ரஜினியின் பிறந்த நாளும் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.அந்த வீடியோ வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி ஆகியோர் நடிப்பில் தலைவர் 168 படம் உருவாகிறது.

இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார். முத்து, அருணாச்சலம் போன்றூ கிராமத்து பின்னணியில் உருவாகப்போகும் கதை. ரஜினி ரசிகர்களின் கமர்ஷியல் என்டர்டெயினராகவும் இந்த படம் இருக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தலைவர் 168 படத்திற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது. ரஜினியுடன் நடிகை கீர்த்தி சுரேஷும் இன்றைய ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார்.

தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோ க்ளிப்கள் வலைதளத்தில் சக்கை போடு போட்டது. அது போன்று இந்த படத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகக் கூடாது என படக்குழுவினர் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பை பரம ரகசியமாக நடத்த இயக்குநர் சிவா திட்டமிட்டுள்ளார்.

https://www.A1TamilNews.com

From around the web