இருபது நாட்களில் ரூ. 800 கோடியை நெருங்கும் ரஜினியின் 2.0!

சென்னை : ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவன தயாரிப்பில் உருவான 2.0 வெளியாகி நான்கு வாரங்கள் ஆகிவிட்டன. உலக அளவில் 15000 அரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வெளியான இந்தப் படத்திற்கு உலகம் முழுவதிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது. வெளியாகி நான்கு வாரங்கள் ஆனப் பிறகும் மக்களிடம் 2.0 படத்தைப் பார்க்கும் ஆர்வம் சற்றும் குறையவில்லை. வாரநாட்களில் கூட இப்போதும் சராசரியாக 80 முதல் 90 சதவீத பார்வையாளர்கள் படத்திற்கு வருவதை பார்க்கமுடிகிறது. சென்னை உள்ளிட்ட நகர்ப்புற
 

இருபது நாட்களில் ரூ. 800 கோடியை நெருங்கும் ரஜினியின் 2.0!

சென்னை : ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவன தயாரிப்பில் உருவான 2.0 வெளியாகி நான்கு வாரங்கள் ஆகிவிட்டன. உலக அளவில் 15000 அரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வெளியான இந்தப் படத்திற்கு உலகம் முழுவதிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

வெளியாகி நான்கு வாரங்கள் ஆனப் பிறகும் மக்களிடம் 2.0 படத்தைப் பார்க்கும் ஆர்வம் சற்றும் குறையவில்லை. வாரநாட்களில் கூட இப்போதும் சராசரியாக 80 முதல் 90 சதவீத பார்வையாளர்கள் படத்திற்கு வருவதை பார்க்கமுடிகிறது. சென்னை உள்ளிட்ட நகர்ப்புற அரங்குகளில் புதிய படத்திற்கு ஓரிரு காட்சிகளை ஒதுக்கிவிட்டு 2.0வையே பிரதானமாக வெளிடுகிறார்கள். மல்டிப்ளெக்ஸ்களில் இப்போதும் கூட முன்பதிவு செய்தால்தான் டிக்கெட் கிடைக்கும் நிலை காணப்படுகிறது. இன்று செவ்வாய் கிழமை சென்னை சத்யம், லக்ஸ், எஸ்கேப், பிவிஆர் என எந்த மல்டிப்ளெக்ஸ்களிலிலும் கொண்டரில் டிக்கெட் கிடைக்கவில்லை.

ஹிந்தியில் கடந்த இருபது நாட்களில் கிட்டத்தட்ட ரூ. 200 கோடியை குவித்து வாய்ப்பிளக்க வைத்துள்ளது 2.0.

தெலுங்கில் ரூ. 125 கோடியை வசூலித்துள்ளது.

தமிழில் இதுவரை ரூ. 176 கோடி வசூல் என பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் இந்தப் படத்தின் வசூல் ரூ. 800 கோடியை நெருங்குவதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

– வணக்கம் இந்தியா

From around the web