‘அரசியல் ஆபத்தான விளையாட்டு’ – ரஜினிகாந்த் அதிரடி!

சென்னை : இந்தியா டுடே இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “அரசியல் ஆபத்தான விளையாட்டு,” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார். திரைப்பட உலகத்திற்கு அறிமுகமானது முதல் 2.0 திரைப்படம், இன்றைய அரசியல் உட்பட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். அரசியல் தொடர்பான கேள்விகளின் பதில்கள் வருமாறு : கேள்வி : சினிமாவில் அரசியலை கலப்பதில் உடன்பாடுதானா? “அரசியலையும் சினிமாவையும் கலக்க விரும்பவில்லை. இரண்டும் வெவ்வேறானது. பொழுதுபோக்கு துறையை அரசியலுக்கு பயன்படுத்தக்கூடாது. படங்களில் வரும் ஒரு சில
 

 

சென்னை : இந்தியா டுடே இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “அரசியல் ஆபத்தான விளையாட்டு,” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

திரைப்பட உலகத்திற்கு அறிமுகமானது முதல் 2.0 திரைப்படம், இன்றைய அரசியல் உட்பட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். அரசியல் தொடர்பான கேள்விகளின் பதில்கள் வருமாறு :

கேள்வி : சினிமாவில் அரசியலை கலப்பதில் உடன்பாடுதானா?

“அரசியலையும் சினிமாவையும் கலக்க விரும்பவில்லை. இரண்டும் வெவ்வேறானது. பொழுதுபோக்கு துறையை அரசியலுக்கு பயன்படுத்தக்கூடாது. படங்களில் வரும் ஒரு சில வசனங்களை மக்கள் அவரவருக்கு ஏற்ற வகையில் புரிந்து கொள்ளக் கூடும். அதை நாம் தடுக்க முடியாது. ஆனால் நான் வேண்டுமென்றே படங்களில் அரசியலைத் திணிப்பதில்லை.

கேள்வி : சினிமாவுக்கும் அரசியலுக்கும் என்ன வித்தியாசம் ?

“நான் இன்னும் முழு நேர அரசியல்வாதி ஆகவில்லை. கிடைத்துள்ள கொஞ்ச அனுபவத்தில் சொன்னால், அரசியல் மிகவும் கடினமானது. எல்லாமும் நாடகம். சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் என பலரும் இருக்கிறார்கள். அரசியல் தலைவராக நானே இயக்குநர், நானே எழுத்தாளர், எல்லாமும் நான் மட்டும்தான். இது மிகவும் சவாலாக இருக்கிறது.”

கேள்வி: சினிமாவில் வேகம்தான் உங்கள் சிறப்பு. அரசியலில் ரொம்பவும் நிதானமாக இருக்கிறீர்களே!

“அரசியல் மிகப்பெரிய அதுவும் மிகவும் ஆபத்தான விளையாட்டு. எனவே, நான் மிகுந்த கவனத்துடன் ஆட வேண்டும். சரியான நேரமும் அரசியலில் மிகவும் முக்கியமானதாகும்.”

கேள்வி: ஏன் அரசியலில் இறங்க முடிவு செய்தீர்கள்?

“எல்லாமும் கடவுளின் முடிவு. நான் கடவுள் என்று சொல்லும் போது எல்லா பதில்களும் அதில் அடங்கி இருக்கிறது.”

கேள்வி : உங்கள் வாழ்வில் ஆன்மீகமும் அரசியலில் ஆன்மீகமும் பற்றி?

“சிறு வயதிலேயே அண்ணன் என்னை ராமகிருஷ்ணா மிஷனில் சேர்த்து விட்டார். வேதங்கள், உபநிடதங்கள், தியானம் எல்லாமும் கற்றேன். பின்னாளில் பல்வேறு குருமார்களிடம் கற்றேன். இமயமலை சென்றேன். ஆன்மீகம் என்றால் மன அமைதி தான் முக்கியமானது. மன அமைதியுடன் செய்யும் போது எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய முடியும். அது தான் முக்கியம்.”

நன்றி : இந்தியா டுடே

From around the web